மாப்பிள்ளை தனுஷை அல்ல மாமா ரஜினியை முந்திய சிவகார்த்திகேயன்: கொண்டாடும் ரசிகர்கள்
Recommended Video

சென்னை: ட்விட்டரில் ரஜினிகாந்தை முந்தியுள்ளார் சிவகார்த்திகேயன்.
கோலிவுட் பிரபலங்களில் பலர் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளனர். ட்வீட்டுவது, தங்களின் படங்கள் பற்றி அப்டேட் கொடுப்பது, புகைப்படங்கள், வீடியோ வெளியிடுவதுமாக உள்ளனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் முன்னேறியுள்ளார்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார். இந்நிலையில் ட்விட்டரில் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை தொட்டுள்ளது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கமல்
ரஜினியை ட்விட்டரில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை இன்னும் 5 மில்லியனை தொடவில்லை. 4.69 மில்லியன் பேர் ரஜினியை ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள். ட்விட்டரில் கமலை பின்தொடர்வோரின் எண்ணிக்கை கடந்த வாரம் தான் 5 மில்லியனை தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ்
ட்விட்டரில் சிவகார்த்திகேயன் ரஜினியை முந்தியபோதிலும் அண்ணன் தனுஷை விட பின்தங்கியே உள்ளார். தனுஷை 7.49 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.

ஏ.ஆர். ரஹ்மான்
ட்விட்டரில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை 20.1 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். ஸ்ருதி ஹாஸனை 7.49 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











