டைரக்டருக்கு தங்க செயின் பரிசளித்த சிவகார்த்திகேயன்...எதுக்குன்னு தெரியுமா ?
சென்னை : தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று கூறப்பட்டு வந்த 100 வசூல் சாதனையை சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் சமீபத்தில் முறியடித்துள்ளது.
தியேட்டர், ஓடிடி என அனைத்திலும் உலகம் முழுவதும் டாக்டர் படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டாக்டர் படத்தை தொடர்ந்து டான், அயலான், சிங்க பாதை என வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் அறிமுகப்படுத்திய டைரக்டர்
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை அறிமக இயக்குனரான கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி இருந்தார். யூட்யூப் சேனல் துவக்கி, வெற்றிகரமாக நடத்தி வந்த கார்த்திக் வேணுகோபாலன், பிறகு சினிமாவில் டைரக்டர் ஆனார்.

திருமணத்திற்கு வர மறுத்த சிவகார்த்திகேயன்
இந்நிலையில் டைரக்டர் கார்த்திக் வேணுகோபாலனுக்கு சமீபத்தில் கோவையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு கார்த்திக், சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் ஷுட்டிங் வேலைகள் இருப்பதால் தன்னால் திருமண விழாவில் கலந்து கொள்ள முடியாது என முதலில் கூறி உள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படி ஒரு சர்ப்ரைசா
ஆனால் திருமண நாளன்று கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்திற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சிவகார்த்திகேயன் திருமணத்திற்கு சென்று மணமக்களை வாழ்த்தி உள்ளார். அதோடு டைரக்டர் கார்த்திக்கிற்கு, சிவகார்த்திகேயன் தங்க செயின் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதே தானே தனது கையால் கார்த்திக்கிற்கு போட்டு விட்டுள்ளார்.

பாராட்டும் ரசிகர்கள்
சர்ப்ரைசாக டைரக்டர் திருமணத்திற்கு சென்றது, அவருக்கு தங்க செயின் அளித்தது என அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டார் சிவகார்த்திகேயன். ட்விட்டரில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த ஃபோட்டோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

விரைவில் இரண்டாவது படம்
அதே சமயம் கார்த்திக் வேணுகோபால் விரைவில் தனது இரண்டாவது படத்தை இயக்க போகிறாராம். இந்த படம் முதல் படத்தை விட பிரம்மாண்டமாக இருக்க போகிறதாம். படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், இன்னும் பெயரிடப்படாத இந்த படம் மற்றும் படத்தில் பணியாற்றம் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











