twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிதி வழங்கிய சிவகார்த்திகேயன்

    |

    சென்னை : கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக சினிமா துறை சார்ந்த அத்தனை பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் துணை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் கடுமையாக நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர்.

    Sivakarthikeyan gives financial assistance to Nadigar Sangam members

    இந்த நிலையை சரிசெய்ய, முன்னணி நடிகர்கள் நிதி அளித்து உதவும்படி ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி சமீபத்தில் கேட்டிருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று சிவகார்த்திகேயன் நடத்தும் அறக்கட்டளை சார்பில் நடிகர் சங்கத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கொரோனா நிவாரண நிதிக்காக தமிழக அரசிடம் ரூ.25 லட்சம் நிதி வழங்கிய சிவகார்த்திகேயன், தற்போது நடிகர் சங்கத்திற்காக ரூ.1 லட்சம் வழங்கி உள்ளார். இதற்காக நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சினிமாவை தாண்டியும் பலருக்கும் சிவகார்த்திகேயன் ஏராளமானோருக்கு படிப்பதற்கு, விளையாட்டில் சாதிக்க நினைப்பவர்களுக்கு என ஏராளமானோருக்கு உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டவர். இதனால் திரைத்துறையில் சிவகார்த்திகேயன் மீது பலருக்கும் தனி மரியாதை உண்டு.

    படங்களைப் பொறுத்தவரை, நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் இவர் நடித்த அயலான் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வந்தது. இவற்றைத் தொடர்ந்து தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்தில் நடித்து வருகிறார்.

    முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக்கப்படும் டான் படத்தின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். முக்கிய வில்லன் வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இந்த படத்தில் காமெடியன்கள் நிறைய பேர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    English summary
    Sivakarthikeyan has donated Rs 1 lakh through a trust run by him to the Nadigar Sangam
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X