Sivakarthikeyan Salary - தோல்வி படத்திற்கே இவ்வளவு சம்பளமா?.. என்ன சிவகார்த்திகேயன் இது?
சென்னை: Sivakarthkeyan Salary (சிவகார்த்திகேயன் சம்பளம்) சிவகார்த்திகேயனின் கேரியரில் தோல்விப் படமாக கருதப்படும் சீமராஜாவுக்கு அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
சின்னத்திரையில் நடந்த ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு தொகுப்பாளராக மாறி பின்னர் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் தமிழின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இப்போது இருக்கிறார். அவருக்கென்று சிறுவர்கள், சிறுமிகள் ரசிகர் ரசிகைகளாக இருக்கின்றனர். ஆரம்பத்தில் தடுமாறிய சிவகார்த்திகேயன் போகப்போக தனது திறமையை வளர்த்துக்கொண்டார்.
ரூ 100 கோடி க்ளப்பில் சிவகார்த்திகேயன்: கதை தேர்வில் கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்ட அவர் அந்தப் பாதையில் சிறப்பாகவே பயணித்துவருகிறார். அந்தவகையில் அவர் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு படங்கள் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார் என பலரால் கணிக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் இந்த அசுர வளர்ச்சி அப்படி கணித்தவர்களுக்கு அதிர்ச்சியையே கொடுத்திருக்கிறது.

அடி வாங்கிய பிரின்ஸ்: இப்படிப்பட்ட சூழலில்தான் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார். இரண்டு படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்துவிட்டதால் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் படம் மரண அடி வாங்கியது. அதுமட்டுமின்றி ஒரு வாரத்துக்குள்ளாகவே திரையரங்குகளில் இருந்தும் படம் தூக்கப்பட்டது.
மாவீரனில் சிவகார்த்திகேயன்: பிரின்ஸ் படம் கொடுத்த அடியால் தனது அடியை நிதானமாக எடுத்து வைக்க ஆரம்பித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதன்படி மண்டேலா படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் தற்போது நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

பிரின்ஸ் மட்டும் இல்லை: சிவகார்த்திகேயனின் கேரியரில் பிரின்ஸ் படத்துக்கு முன்னதாகவே ஒரு படுதோல்வி படம் இருக்கிறது. அந்தப் படம்தான் சீமராஜா. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் பொன்ராம் இயக்கிய படம்தான் அது. அதில் சமந்தா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பொன்ராமின் கூட்டணியில் சிவகார்த்திகேயன் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் வெளியானது.

தோல்வி படத்துக்கு சம்பளம்: ஆனால் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய படம் தவறிவிட்டது. இந்நிலையில் அந்தப் படத்துக்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி சீமராஜா படத்துக்கு அவர் 18 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார் என்ற தகவல்தான் இப்போது தீயாக பரவிவருகிறது.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்னது தோல்வி படத்துக்கு 18 கோடி ரூபாய் சம்பளமா, என்ன சிவகார்த்திகேயன் இது என கேள்வி எழுப்பிவருகின்றனர். அவர் இப்போது 20லிருந்து 25 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்குகிறார் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











