கீழ இருந்தவன் மேல ஏறிட்டானே.. ஹேப்பி பர்த்டே சிவகார்த்திகேயன்.. தெறிக்குது #HBDSK ஹாஷ்டேக்!
சென்னை: எதிர்நீச்சல் அடி வென்று ஏற்றுக் கொடி என எத்தனையோ கஷ்டத்துக்கு மத்தியில் எதிர்நீச்சல் அடித்து இன்னைக்கு கோலிவுட்டின் சிறந்த என்டர்டெயினராகவும் கலெக்ஷன் கிங்காகவும் மாறியுள்ள சிவகார்த்திகேயனின் 36வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
Recommended Video
டாக்டர், அயலான், டான் என அடுத்தடுத்த படங்களில் வருகைக்காக காத்திருக்கும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் எஸ்கேவின் பிறந்தநாளை ஏகப்பட்ட ஹாஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சிவகார்த்திகேயனை வாழ்த்தி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் பிறந்தநாள்
1985ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி பிறந்த சிவகார்த்திகேயன் இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 2010ம் ஆண்டு ஆர்த்தியை திருமணம் செய்து கொண்ட சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்கிற அழகான மகளும் உள்ளார். கனா படத்திற்காக ஆராதனா பாடிய "வாயாடி பெத்த புள்ள" பாடல் 200 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கீழ இருந்து மேல
தல அஜித்தின் ஏகன் படத்தில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்த சிவகார்த்திகேயன், விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு மூலம் கலக்கி தொகுப்பாளராக உருமாறி தற்போது கோலிவுட்டின் டாப் இளம் ஹீரோவாக அசத்தி வருகிறார். தளபதி விஜய்க்கு பிறகு தமிழ்நாட்டின் குட்டீஸ்களின் இதயங்களை பிடித்ததுள்ளது சிவகார்த்திகேயன் தான் என நடிகர் விஜய்யே பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் போஸ்டர்
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர் படத்தின் பிரத்யேக போஸ்டரை படக்குழு வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் மார்ச் 26ம் தேதி இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் திரைக்கு வருகிறது.

ஹன்சிகா வாழ்த்து
மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஹன்சிகா, சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஹேப்பி பர்த்டே சிவகார்த்திகேயன், எப்போதும் சந்தோஷமாக இருங்கள் என வாழ்த்தி உள்ளார்.

சாந்தனு வாழ்த்து
சகோதரர் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்கள், வாழ்க்கையில் இனி எப்போதும் வெற்றியையே காண்பீர்கள், நல்ல ஆரோக்கியத்துடன் பல ஆண்டுகள் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள் என நடிகர் சாந்தனு தனது ட்வீட் போட்டு வாழ்த்தி உள்ளார். ஏகப்பட்ட பிரபலங்களும் சிவகார்த்திகேயனை வாழ்த்தி வருகின்றனர்.

அயலான் பாடல் ரிலீஸ்
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தனது படத்தின் பாடல் உருவாக வேண்டும் என்கிற நீண்ட நாள் கனவு சிவகார்த்திகேயனுக்கு அயலான் படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. இன்று அந்த பாடலை படக்குழு சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப் போகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்கள் அந்த பாடலுக்கு வெயிட்டிங்.


Click it and Unblock the Notifications











