D imman: இந்த ஜென்மத்துல சேர மாட்டேன்.. சிவகார்த்திகேயன் செய்த துரோகம்.. மனம் உடைந்த டி இமான்!
சென்னை: சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் சேர மாட்டேன், அவர் எனக்கு துரோகம் செய்து விட்டார் என்று இசையமைப்பாளர் டி.இமான் மனம் உடைந்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்திப்பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், நம்ம வீட்டுப்பிள்ளை, சீமராஜா என பல படங்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்தவர் டி இமான்.
மனம் கொத்தி பறவை படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு டி இமான் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. இருவரும் நல்ல நட்புடன் பழகிவந்த நிலையில், கடந்த பல வருடங்களாகவே இருவரும் பேசிக்கொள்வதில்லை.

இந்த ஜென்மத்துல சேர மாட்டேன்: இந்நிலையில், இதுகுறித்து பேட்டி அளித்துள்ள இசையமைப்பாளர் டி இமான், சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அவருடைய உழைப்புதான் அவரை இந்த இடத்தில் வைத்து இருக்கிறது. மனம் கொத்தி பறவை படத்தில் ஆரம்பித்த அவருடனான பயணம் பல படங்களில் தொடர்ந்தது. ஆனால், சிவகார்த்திகேயனுடன் இனி இந்த ஜென்மத்தில் சேர்ந்து பயணிப்பது முடியாது, அது மிகவும் கஷ்டம் சில தனிப்பட்ட காரணம் இருக்கிறது. அவர் எனக்கு செய்த மிகப்பெரிய துரோகம் அதை என்னால் வெளியில் சொல்ல முடியாது. அடுத்த ஜென்மத்தில், நான் ஒரு வேளை இசையமைப்பாளராகவும், அவர் நடிகராகவும் இருந்தால், வாய்ப்பிருக்கிறதா என்று பார்ப்போம்.
மன்னிக்க முடியாத துரோகம்: மிகவும் நல்ல மனிதர் வெளிப்படையான மனிதர் எப்படி துரோகம் இழைக்க முடியும் என்று செய்தியாளர் கேட்டதற்கு, துரோகம் என்றால் அது தானே, துரோகம் அப்படித்தானே நடக்கும். அந்த துரோகத்தை நான் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். அதுவரை என்னிடம் அவர் அன்பாகத்தான் பேசிக்கொண்டுஇருந்தார். அதன் பின்னர் தான் அது எனக்கு துரோகம் என்பது தெரியவந்தது.

குழந்தைகளுக்காக மூடி மறைக்கிறேன்: எனக்கு எப்படி துரோகம் இழைக்க உனக்கு மனது வந்தது என்று சிவகார்த்திகேயனிடம் பலமுறை கேட்டு இருக்கிறேன். அதற்கு அவர் சொன்ன பதிலை நான் இந்த இடத்தில் சொல்ல முடியாது. பல விஷயங்களை நான் மூடி மறைக்கிறேன் என்றால் அதற்கு காரணம் குழந்தைகளின் எதிர்காலம் தான்.
மனம் உடைந்த பேட்டி: இந்த ஊர் என்னை சரியானவன் என்று சொல்கிறதா? இல்லை தவறானவன் என்று சொல்கிறதா? என்பது பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. எனக்கு நான் யார் என்று தெரியும் என்னை படைத்தவனுக்கு நான் யார் என்று தெரியும், என் குடும்பத்திற்கும், என் இறைவனுக்கும் நான் சரியாக இருக்கிறேன் என்று தெரிந்தால் போதும் என்ற இசையமைப்பாளர் டி இமான் அந்த பேட்டியில் மனம் உடைந்து பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











