எனக்கு ரெஸ்பெக்ட்தான் முக்கியம்... அது இல்லைனா அவ்ளோதான்.. யாரை சொல்கிறார் சிவகார்த்திகேயன்?

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் மெகா ஹிட்டானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படமானது பெரிய ரெஸ்பான்ஸை பெற்றது. தற்போது அவர் சுதா கொங்கரா இயக்கத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும், சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் நடித்துவருகிறார். இவற்றில் அத்தனை படங்களுக்குமே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில் சிவகார்த்திகேயன் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

கோலிவுட்டின் இப்போதைய டாப் ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் கடுமையான எதிர்ப்புகளையும் ட்ரோல்களையும் சந்தித்த அவர் இப்போது விமர்சித்தவர்களின் வாயை அடைத்திருக்கிறார். பத்து படங்களுக்குள் காணாமல் போய்விடுவார் என்று ஆரூடம் கூறியவர்கள் எல்லாம் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு அவரது வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. அவருக்கென்று பெரும் ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கிறது.

sivakarthikeyan throwback stories amaran

அடுத்த விஜய்?: அதேபோல் விஜய் நடித்த GOAT படத்தில் எஸ்கே கேமியோ ரோல் செய்திருந்தார். அப்போது விஜய் அவரது கையில் துப்பாக்கியை கொடுத்து பேசும் வசனம் அப்படியே சிவாவுக்கு பொருந்திப்போவதாக அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள். அதற்கேற்றபடிதான் அவரின் படங்களுடைய ரிசல்ட்டும் இருக்கிறார். கடைசியாக வெளியான அமரன் திரைப்படம்கூட 300 கோடி ரூபாய்வரை உலகம் முழுவதும் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் அவர்தான் இப்போதைக்கு பெரிய கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவராக திகழ்கிறார்.

சிவா மட்டும்தான்: முக்கியமாக கடந்த வருடம் சூர்யா, தனுஷ் உள்ளிட்டோர் நடித்த படங்கள் எல்லாம் படுமோசமான தோல்வியை சந்தித்தன. வசூலும் பெரிதாக செய்யவில்லை. ஆனால் சிவாவோ கடந்த வருடத்தில் அமரன் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்துவிட்டார். இதனால் அவரது சம்பளமும் படுவேகமாக உயர்ந்திருக்கிறது. இப்போது அவர் தனது சம்பளமாக 50 கோடி ரூபாய்க்கும் மேல் பெறுகிறார் என்று ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படங்கள்: அமரன் படத்தை முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துவருகிறார். அதில் அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இந்தப் படம் தவிர்த்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தின் பணிகளும் முடியும் தருவாயில் இருக்கிறது. மேலும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அநேகமாக வெங்கட் பிரபுவுடன் அவர் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் பேட்டி: இந்நிலையில் சிவகார்த்திகேயன் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "எனக்கு மரியாதைதான் முக்கியம். அதை ரொம்பவே எதிர்பார்ப்பேன். அப்படி மரியாதை கிடைக்காவிட்டால் அவர் யாராக இருந்தாலும், அவரால் எனக்கு எவ்வளவு பெரிய ஆதாயம் கிடைத்தாலும் அவரிடமிருந்து விலகிவிடுவேன்" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மறைமுகமாக யாரையோ சாடியிருக்கிறார் என்று கூறிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X