இந்திய ராணுவத்தில் சேர்ந்துவிடுங்கள்.. அமரன் சிவகார்த்திகேயனுக்கு வந்த அழைப்பு.. ஓவர் ஹைப்பா இருக்கே

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அமரன் திரைப்படம் நாளை பான் இந்தியா அளவில் ரிலீஸாகவிருக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரித்திருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க படக்குழு நேற்று செய்தியாளர்களை சந்தித்தது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அயலான், மாவீரன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அதிலும் அயலான் திரைப்படம் பல வருடங்கள் கழித்து வெளியானாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முக்கியமாக குழந்தைகளை ரொம்பவே ஈர்த்ததால் போட்டிக்கு களமிறங்கிய தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கியது அயலான். வரிசையாக இரண்டு படங்களும் ஹிட்டடித்திருப்பதால் எஸ்கேவும், அவரது ரசிகர்களும் மிகப்பெரிய மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

amaran sivakarthikeyan


அமரன்: சூழல் இப்படி இருக்க இப்போது அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிவா. ரங்கூன் படத்தை இயக்கி வெகுவாக கவனம் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை இயக்க; கமல் ஹாசன் தயாரித்திருக்கிறார். கமலின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் முதன்முறையாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிவாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமியின் மேக்கிங் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் இருக்கிறது.

முகுந்த் வரதராஜன்: இப்படமானது இந்திய ராணுவத்தில் பணியாற்றி சண்டையின்போது வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது. அதன் காரணமாகவும் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட ஹைப் எகிறியுள்ளது. படமானது பான் இந்தியா அளவில் நாளை வெளியாகவிருக்கிறது. அமரனுக்கு போட்டியாக பிரதர், பிளெடி பெக்கர் ஆகிய படங்கள் களமிறங்கினாலும் இந்தப் படத்தின் மீதுதான் பலரின் கவனமும் இருக்கிறது.

பட ப்ரோமோஷன்: படத்தின் ப்ரோமோஷன் பணிகள் கடந்த சில வாரங்களாகவே சூடுபிடித்திருக்கின்றன. அந்தவகையில் சென்னையில் நேற்று சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி, சாய் பல்லவி உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது பேசிய சிவகார்த்திகேயன், “டெல்லியில் ராணுவ வீரர்களுக்கு அமரன் படத்தின் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்கை செய்தோம். அப்போது படம் பார்த்துவிட்டு அவர்கள் என்ன சொல்வார்களோ என்று எனக்கு கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது.

அவர்கள் தந்த ஆஃபர்: ஆனால் படத்தை பார்த்துவிட்டு அவர்கள் ரொம்பவே மகிழ்ச்சியடைந்துவிட்டார்கள். அதில் இரண்டு ராணுவ அதிகாரிகள் என்னிடம் வந்து நாங்கள் உனக்கு ஒரு ஆஃபர் தருகிறோம். எங்களுடன் வந்து இந்திய ராணுவத்தில் சேர்ந்துவிடு என்றார்கள். அதை கேட்டதும் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது” என்றார். இந்தப் பேச்சு இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. முக்கியமாக சிவகார்த்திகேயன் பேசி பேசியே இப்படி ஓவர் ஹைப்பை படத்துக்கு ஏற்றுகிறாரே என்று நெட்டிசன்கள் கமெண்ட்ஸையும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X