உலகின் தலைசிறந்த சொல் ‘செயல்’.. செய்து காட்டுவோம்.. சிவகார்த்திகேயன் அட்வைஸ் !
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வு காணொலியை வெளியிட்டு உள்ளார்.
Recommended Video
கொரோனா பாதிப்புக்கு எதிராக தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் நாம் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். ஏனெனில் அப்படி வழங்கி வீட்டினுள்ளே இருந்தால் தான் கொரோனா தொற்றில் இருந்து தப்ப முடியும். வீட்டில் இருக்கும் இந்த காலத்தில் நம்மை நாமே சுத்தமாக வைத்து கொள்வது மிகவும் அவசியம் என்றும் அறிவுரை கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

இறுதியாக உலகின் தலை சிறந்த சொல் 'செயல்' வீட்டில் இருந்தே இத செஞ்சி காமிப்போம் என்று வேலைகாரன் பட பாணியில் மக்களுக்கு ஊக்கமும் அறிவுரையும் கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும், தன் உறவுகளை மறந்து உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து இருக்கிறார், தமிழக சுகாதாரதுறை அமைச்சருக்கும் மற்றும் அரசுக்கும் நன்றி தெரிவித்து இருக்கிறார் .

பல நடிகர்கள் தாங்களே முன் வந்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். ரஜினி, கமல் , சூர்யா, தனுசை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் வீடியோ மூலம் மக்களுக்கு அறிவுரைகளை கூறியுள்ளார்.
நாடு முழுவதும் தற்சமயம் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகி வரும் சூழலில் .தொடர்ந்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு இந்திய அரசால் வலியுருத்த பட்டிருக்கிறது. மார்ச் 31 வரை முதலில் இருந்த ஊரடங்கு உத்தரவு தற்போது ஏப்ரல் 14 வரை நீட்டிக்கபட்டுள்ளது. மக்களை வீட்டிலே இருக்கும் படி அரசு வேண்டி கொண்டுள்ளது.

தடையை மீறி மக்கள் வெளியே வரக்கூடாது என்றும் அதை மீறி வந்தால் தண்டனை உறுதி என தமிழக அரசு எச்சரித்து உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 1 படப்பிடிப்பு துவங்கும் சினிமா செயல்பட துவங்கும் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்க பட்ட நிலையில் அனைத்தும் தலைகீழாக மாறி ரசிகர்களையும் சினிமாவை நம்பிய இருந்த பல லட்ச தொழிலாளர்களையும் கலக்கமடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











