'நெல்' ஜெயராமனின் சிகிச்சை செலவு, மகனின் படிப்பு செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்
Recommended Video

சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நெல் ஜெயராமனின் சிகிச்சை செலவை ஏற்றுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
பிரபல நெல் ஆராய்ச்சியாளரான நெல் ஜெயராமன் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் சிகிச்சைக்கு போதிய பணம் அவர் குடும்பத்தாரிடம் இல்லை.
இந்நிலையில் நெல் ஜெயராமனுக்கு உதவி செய்யுமாறு சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சிவகார்த்திகேயன்
நெல் ஜெயராமனின் சிகிச்சைக்கு முழுப் பொறுப்பேற்றுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் அவரின் மகனின் படிப்பு செலவையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அப்பல்லோ
நெல் ஜெயராமன் தன்னை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட உடன் மருத்துவமனைக்கு சென்று அவரை சந்தித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
பாராட்டு
நெல் ஜெயராமனுக்கு உதவி செய்ய முன்வந்த சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
நல்ல மனசு
ஒருவரின் கஷ்டத்தை பார்த்து உதவ வந்த நல்ல மனசை பலரும் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











