இந்த சூப்பர் ’ஹீரோ’வும் ஜோக்கர் ’தமிழ்ராக்கர்ஸ்’ பிடியில் இருந்து தப்பவில்லை!

சென்னை: கார்த்தியின் தம்பி படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ஹீரோ படமும் ஆன்லைன் பைரசிக்கு இரையாகியுள்ளது.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், இவானா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஹீரோ படம் இன்று வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு விஷால், சமந்தா நடிப்பில் வெளியான இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் மறுபடியும் ஒரு ஹிட் படத்தைக் கொடுத்துள்ளார்.

ரிலீசான கொஞ்ச நேரத்தில்

ரிலீசான கொஞ்ச நேரத்தில்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று வெளியான சிவகார்த்திகேயனின் ஹீரோ மற்றும் கார்த்தியின் தம்பி ஆகிய இரு படங்களும் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் பைரசி தளங்களில் லீக்காகி உள்ளன.

அதிக பட்ஜெட்

அதிக பட்ஜெட்

சிவகார்த்திகேயன் படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பொருட்செலவில் ஹீரோ படம் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஹீரோ படம் என்பதால், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், சண்டைக் காட்சிகள் என ஏகத்துக்கு செலவு செய்துள்ளனர். பாலிவுட் நடிகர் அபய் தியோல் என நடிகர்களுக்கான செலவும் அதிகம் தான்.

பாசிட்டிவ் விமர்சனம்

பாசிட்டிவ் விமர்சனம்

ஹீரோ படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அவரது பெஸ்ட் என ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

ஜோக்கர் வில்லன்

ஜோக்கர் வில்லன்

என்னதான் படத்தில் பேட்மேன் ரேஞ்சுக்கு ஹீரோ சூப்பர் ஹீரோவாக இருந்தாலும், நிஜத்தில் அவனையும் விட்டு வைக்காத தமிழ்ராக்கர்ஸ் போன்ற ஜோக்கர் வில்லன்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். இவர்களிடம் இருந்து தமிழ் சினிமாவை எந்த ரியல் சூப்பர் ஹீரோ காப்பாற்றுவார் என்பது பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

தயாரிப்பாளர்களுக்கு தலைவலி

தயாரிப்பாளர்களுக்கு தலைவலி

பல பிரச்சனைகளை கடந்து நீதிமன்றத்தில் போராடி ஹீரோ படத்தை கே.ஜே.ஆர். நிறுவனம் இன்று மிகப்பெரிய அளவில் ரிலீஸ் செய்துள்ளது. இந்த ஹீரோ படத்தை ஒரு நாள் கூட அவகாசம் இல்லாமல், இப்படி சட்டென்று ஆன்லைனில் வெளியிட்டு தயாரிப்பாளர்களுக்கு தலைவலியை உண்டாக்கியுள்ளனர்.

ஹீரோவாக இருந்தால்

ஹீரோவாக இருந்தால்

ரசிகர்கள் ஹீரோவாக இருந்தால் பைரசியில் படத்தை பார்க்க மாட்டார்கள், தியேட்டரில் தான் வந்து பார்ப்பார்கள் என பைரஸியை சமாளிக்க ஹீரோ படக்குழு புதிய டெக்னிக்கை பயன்படுத்தி விளம்பரங்களை வெளியிட்டாலும், தமிழ்ராக்கர்ஸ், தமிழ் யோகி, குட்டி மூவிஸ் என பல ஆன்லைன் பைரஸி தளங்களில் பல ரசிகர்கள் படத்தை வேகமாக டவுன்லோடு செய்து பார்த்து வருவதை தவிர்க்க முடியவில்லை.

More from Filmibeat

Read more about: hero ஹீரோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X