கோலிவுட் எஸ்.கே.வின் 'ஹீரோ' டீசர்.. பாலிவுட் எஸ்.கே. வெளியிட்டார்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ஹீரோ. இது ஒரு சூப்பர் ஹீரோ பேன்டசி திரைப்படம்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல திரைப்பட இயக்குனர் பிரியதர்ஷன், லிசி தம்பதியின் மகள் கல்யாணி நடித்துள்ளார். இது தான் அவரது முதல் தமிழ் படம்.
ஹீரோ திரைப்படம் கிறிஸ்த்துமஸ் விடுமுறையையொட்டி டிசம்பர் 20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று காலை 11.03 மணிக்கு வெளியானது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் டீசரை வெளியிட்டார்.
Comments


Click it and Unblock the Notifications