Sivakarthikeyan Salary: ப்பா.. விட்டா 100 கோடி கேட்பாரு போலயே.. சிவகார்த்திகேயன் சம்பளம் இவ்வளவா?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அதிரடியாக தனது சம்பளத்தை உயர்த்தி விட்டதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. 10 ஆண்டுகளில் சினிமாவில் பல இளம் நடிகர்கள் கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்ட நிலையில், சின்சியராக உழைத்து தனது லட்சிய இடத்தை அடைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.
ரஜினி, விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, கார்த்தி வரிசையில் கோலிவுட்டில் அடுத்ததாக வசூலில் கலக்கி வருகிறார் சிவகார்த்திகேயன்.

மாவீரன் திரைப்படம் 89 கோடி வசூலை ஈட்டிய நிலையிலும், அடுத்து தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி விட்டார் என தகவல்கள் கசிந்துள்ளன.
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி: சின்னத்திரையில் தொடங்கிய பயணம் சினிமாவில் தற்போது தாறுமாறு வளர்ச்சி கண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். நடிகர் விஜய்க்கு அடுத்து தமிழ் சினிமாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த நடிகராகவும் சிறப்பாக நடனம் ஆடுவது, நகைச்சுவை செய்து ரசிகர்களை என்டர்டெயின் செய்வது, ஆக்ஷனில் அசத்துவது என அதகளம் செய்து வருகிறார்.
சிவகார்த்திகேயனை நம்பி பெரிய பட்ஜெட்டில் படங்கள் உருவாக தொடங்கி உள்ள நிலையில், அப்படியே தனது சம்பளத்தையும் அதிரடியாக உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டபுள் மடங்கு உயர்வு: மிஸ்டர் லோக்கல் படத்துக்கு 14 கோடி ரூபாய் சம்பள பிரச்சனை காரணமாக வழக்கு நடைபெற்ற நிலையில், சமீப காலமாக 35 கோடி ரூபாய் வரை சிவகார்த்திகேயன் புதிய படங்களுக்கு வாங்கி வரும் நிலையில், இனிமேல் அதனை டபுள் மடங்காக உயர்த்தப் போகிறார் சிவகார்த்திகேயன் என்கின்றனர்.
நடிகர் விஜய், ரஜினி எல்லாம் 200 கோடி சம்பளத்துக்கு அதிரடியாக உயர்ந்து விட்ட நிலையில், தனது சம்பளத்தை 70 கோடியாக அதிகரிக்க இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தயாரிப்பாளர்கள் வெயிட்டிங்: சிவகார்த்திகேயனை எப்படியாவது புக் செய்து விட்டால், 100 கோடி, 200 கோடி பிசினஸ் செய்து விடலாம் என நினைத்துக் கொண்டு பல தயாரிப்பாளர்கள் வெயிட்டிங்கில் காத்துக் கொண்டிருப்பதை கனகச்சிதமாக அறிந்து வைத்துக் கொண்டு தான் இப்படி, எவ்வளவு கேட்டாலும் கொடுப்பாங்க என்கிற நம்பிக்கையுடன் கோதாவில் குதித்து இருக்கிறார் மாவீரன் என்கின்றனர்.
100 கோடிக்கு மேல் சம்பளம் கேட்கும் பெரிய நடிகர்களை அணுக முடியாத தயாரிப்பாளர்கள் 70 கோடிக்கு என்ன அதற்கு மேலும் கொடுத்து ஒப்பந்தம் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என பேசிக்கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications











