»   »  சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் நடிகைகள் பற்றி ஒரு விஷயம் கவனிச்சீங்களா?

சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் நடிகைகள் பற்றி ஒரு விஷயம் கவனிச்சீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் நடிகைகள் பற்றி ஒரு விஷயம் கவனிச்சீங்களா?

சென்னை: சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் ஹீரோயின்கள் காலப்போக்கில் காணாமல் போய்விடுகிறார்கள்.

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து படுவேகமாக வளர்ந்துவிட்டார் சிவகார்த்திகேயன். அவரை பார்த்து சின்னத்திரை பிரபலங்கள் சிலருக்கும் ஹீரோ ஆசை வந்துள்ளது.

சிவகார்த்திகேயன் தற்போது வேலைக்காரன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஓவியா

ஓவியா

மெரினா படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன். அந்த படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்த ஓவியா காணாமல் போனார்.

ஆத்மியா

ஆத்மியா

சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்திப் பறவை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆத்மியா. என்ன மியா என்று கேட்கும் அளவுக்கு ரசிகர்கள் அவரை மறந்தே போய்விட்டனர்.

ரெஜினா

ரெஜினா

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்தவர் ரெஜினா கசான்ட்ரா. இன்னும் கோலிவுட்டில் போராடிக் கொண்டிருக்கிறார்.

ப்ரியா ஆனந்த்

ப்ரியா ஆனந்த்

எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயன் காதலியாக வந்தார் ப்ரியா ஆனந்த். தமிழ் படங்களில் இன்னும் வளர்ந்து வரும் நடிகையாகவே உள்ளார். இந்தி பக்கம் சென்றும் பலனில்லை.

காக்கிச் சட்டை

காக்கிச் சட்டை

வருத்தப் படாத வாலிபர் சங்கம், காக்கிச் சட்டை என்று இரண்டு படங்களில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்ட ஸ்ரீதிவ்யா வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கிறார்.

ஹன்சிகா

ஹன்சிகா

கோலிவுட்டில் உச்சத்தில் இருந்த ஹன்சிகா சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து மான் கராத்தே படத்தில் நடித்தார். தற்போது வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடுகிறார்.

கீர்த்தி

கீர்த்தி

ரஜினி முருகன், ரெமோ என்று இரண்டு ஹிட் படங்களில் சிவாவுடன் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். படுவேகமாக வளர்கிறார் என்று பார்த்தால் மந்தமாகிவிட்டார்.

நயன்தாரா

நயன்தாரா

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா. அவ்வளவு தான்பா சொல்ல வேண்டியதை சொல்லியாச்சு.

English summary
Actresses who have shared and sharing screen space with Sivakarthikeyan have something in common. Siva came from television to Kollywood and has got a big name for him through his hard work and dedication.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil