தன் படத்திற்கு தானே ரெவ்யூ கொடுத்து ப்ளூ சட்டை மாறனை கலாய்த்த எஸ்கே...தீயாய் பரவும் வீடியோ

சென்னை : தான் நடித்த டான் படத்திற்கு தானே ரெவ்யூ கொடுத்ததுடன், ப்ளூ சட்டை மாறனின் குரலிலேயே மிமிக்ரி செய்து சிவகார்த்திகேயன் ரெவ்யூ கொடுத்த வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

SivaKarthikeyan என்ன சொன்னார் ? யார் மீதும் கோபம் இல்லை |Sivakarthikeyan|Filmibeat Tamil

விஜய் டிவியில் ஆங்கராக இருந்து பின் சினிமாவிற்கு வந்து, நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என படிப்படியாக மிக குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோ பட்டியலில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோவாகவும் மாறி உள்ளார் சிவகார்த்திகேயன்.

வரவேற்பை பெற்ற டான்

வரவேற்பை பெற்ற டான்

வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன், தற்போது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ள டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது. மே 13 ம் தேதி ரிலீசான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மிமிக்ரி செய்த சிவகார்த்திகேயன்

மிமிக்ரி செய்த சிவகார்த்திகேயன்

டான் படத்தின் ப்ரொமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பேட்டிகள் அளித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அப்படி ரசிகர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனிடம், நிகழ்ச்சி தொகுப்பாளர், மிமிக்ரி பண்ண சொல்லி கேட்கிறார். ஒவ்வொரு பிரபலத்தின் பெயரையும் சொல்லி அவர்களை போல பேச சொல்கிறார்.

ப்ளூ சட்டை மாறனை கலாய்த்த சிவகார்த்திகேயன்

ப்ளூ சட்டை மாறனை கலாய்த்த சிவகார்த்திகேயன்

எஸ்.ஜே.சூர்யா, மனோபாலா, கிங்ஸ்லே, அனிருத் ஆகியோர்களின் குரலில் அவர்களை போலவே மிமிக்ரி செய்து ரசிகர்களை கவர்ந்தார் சிவகார்த்திகேயன். அப்போது அவரிடம், டான் படத்திற்கு நீங்க ரெவ்யூ கொடுங்க என கேட்கிறார் நிகழ்ச்சி தொகுப்பாளர். முதலில் மறுக்கும் சிவகார்த்திகேயன், பிறகு சட்டென்று யாரும் எதிர்பாராத விதமாக ப்ளூ சட்டை மாறனின் குரலில், அவரை போலவே ரெவ்யூ செய்து காட்டுகிறார்.

என்ன ரெவ்யூ கொடுத்தார்

என்ன ரெவ்யூ கொடுத்தார்

டான் படத்தை பொறுத்தவரை, சம்மரில் தியேட்டரில் குதூகலாக போய் படம் பார்க்கலாம். எல்லா எமோஷன்சும் இந்த படத்தில் வச்சிருக்காங்க. ஏன் வச்சிருக்காங்கன்னு தெரியாது. ஆனால் வச்சிருக்காங்க, பார்த்து என்ஜாய் பண்ணுங்க என டான் படத்திற்கு ரெவ்யூ கொடுக்கிறார். இது அரங்கத்தில் இருந்த அனைவரையும் மிகவும் கவர்ந்தது. ப்ளூ சட்டை மாறன் குரலில் மிமிக்ரி செய்து, சிவகார்த்திகேயன் அவர் படத்திற்கு அவரே ரெவ்யூ கொடுத்த ஜாலியான வீடியோ சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X