சிவகார்த்திகேயன் ஹீரோவானதற்கு இமான் முக்கிய காரணம்.. சீக்ரெட் சொன்ன பிரபலம்.. ஓஹோ அப்படியா?

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான பராசக்தி திரைப்படம் சுமார் ஹிட்டைதான் பெற்றது. ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம்தான் கதைக்களம் என்றாலும்; சுதாவின் ட்ரீட்மென்ட் ஒர்க் அவுட் ஆகாததால் படம் மெகா ஹிட்டாகவில்லை. அடுத்ததாக சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் பிரபல பாடலாசிரியர் யுகபாரதி அளித்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயன், இமான் குறித்து பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனக்கான மார்க்கெட்டை உருவாக்கியவர் சிவகார்த்திகேயன். அவர் நடிக்க ஆரம்பித்தபோது இவரெல்லாம் பத்து படங்கள்கூட தாண்டமாட்டார் என்று ஆரூடம் கூறினார்கள் சிலர். ஆனால் அவரோ டாக்டர், டான், அமரன், பராசக்தி என நான்கு நூறு கோடி ரூபாய் வசூல் படங்களில் நடித்து தன்னை விமர்சித்தவர்களை பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார். அடுத்ததாக சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடித்துவருகிறார். இதை முடித்துவிட்டும் அவர் சிவக்குமார் இயக்கத்தில்தான் நடிக்கவிருக்கிறாராம்.

Sivakarthikeyan Imman Issue Lyricist Yugabharathi Reveals Untold Story Behind SK s First Film Opportunity
Photo Credit:

மிஸ்டர் க்ளீன்: சிவகார்த்திகேயனை பொறுத்தவரை திரைத்துறையில் அவருக்கு மிஸ்டர் க்ளீன் என்ற இமேஜ்தான் இருந்தது. மது, சிகரெட் உள்ளிட்ட எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நடிகராக மின்னினார். ஆனால் இமான் விவகாரம் அவருக்கு இருந்த இமேஜை காலி செய்துவிட்டது. ஒரு பேட்டியில் பேசியிருந்த இசையமைப்பாளர் டி.இமான், 'இனிமேல் சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் இணைந்து பணியாற்றமாட்டேன். அடுத்த ஜென்மத்தில் வேண்டுமானால் அது நடக்கலாம். அவர் எனக்கு அவ்வளவு பெரிய துரோகத்தை செய்துவிட்டார்' என பேசியிருந்தார்.

என்ன நடந்தது?: அவரது இந்தக் குற்றச்சாட்டு எஸ்கேவை பற்றி பலரும் பலவிதமாக பேச வழி வகுத்தது. அதிலு இமானும் அவரது முதல் மனைவி மோனிகாவும் டைவர்ஸ் செய்வதற்கே சிவாதான் காரணம்; வெளியே சொல்ல முடியாத துரோகத்தை அவர் இமானுக்கு செய்துவிட்டார் என்று இஷ்டத்துக்கு கதை கட்டினார்கள். அதற்கு எஸ்கேவோ எதுவும் ரியாக்ட் செய்துகொள்ளாமல் அமைதியாகவே இருந்தார். மேலும் அவர் இமானுக்கு தொடர்புகொண்டு அந்தப் பேட்டியை நீக்க சொல்லுமாறு கேட்டதாகவும் ஒரு தகவல் வட்டமடித்தது.

மறுத்த மோனிகா: முக்கியமாக இந்த விஷயத்தில் சிலரோ எல்லை மீறி சென்று சிவாவையும், மோனிகாவையும் இணைத்து வைத்து பேசினார்கள். அதை பார்த்து காண்டான மோனிகாவோ, இந்த விவகாரத்தில் இமான் தேவையில்லாமல் சிவகார்த்திகேயன் பெயரை இழுத்துவிடுகிறார். சிவா அப்படிப்பட்டவர் இல்லை. எனக்கும் இமானுக்கும் சண்டை வந்தபோது எஸ்கே எனக்கு சப்போர்ட் செய்தார் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பிரபல பாடலாசிரியர் யுகபாரதி சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

யுகபாரதி பேட்டி: அவர் கொடுத்த பேட்டி ஒன்றில், "மனம் கொத்தி பறவை படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தற்கு நானும் இமானும் காரணம் என்று அவருக்கே தெரியுமா என்று தெரியவில்லை. விஜய் டிவியில் சிவாவை பார்த்துவிட்டு இவர் நன்றாக செய்கிறாரே என்று பேசிக்கொண்டிருந்தோம். அப்போது எழிலும் வந்தார். அவரும் ஐந்து வருடங்கள் கேப் விட்டிருந்தார். அவரிடம், சிவகார்த்திகேயன் என்ற ஒரு பையன் நல்லா செய்கிறார். அவரை நீங்கள் ஏன் உங்கள் படத்தில் நடிக்க வைக்கக்கூடாது என்று கேட்டோம். அவரும், 'எனக்கும் அந்தப் பையன் செய்வது பிடிக்கும். ஹீரோவாக நடிக்க வைக்கலாமே' என கூறினார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X