லாக்டவுன் முடிஞ்சதும் ஆரம்பிக்கிறாங்களாமே! பிரபல தெலுங்கு ஹீரோவுடன் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?
சென்னை: பிரபல தெலுங்கு ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Recommended Video
பிரபல தெலுங்கு ஹீரோ பவன் கல்யாண். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியான இவர், ஏராளமான தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், ஸ்கிரிப்ட் ரைட்டர், பாடகர், ஸ்டன்ட் ஒருங்கிணைப்பாளர் உட்பட பலமுகம் கொண்டவர் இவர்.

வக்கீல் சாப்
ஜனசேனா என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வரும் இவர், இப்போது வக்கீல் சாப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அஞ்சலி, நிவேதா தாமஸ், பிரகாஷ் ராஜ், நரேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். தமன் இசை அமைக்கிறார். வேணு ஶ்ரீராம் இயக்கும் இந்தப் படம், இந்தியின் வெளியான, பிங்க் படத்தின் ரீமேக். இதன் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

எதிர்பார்ப்பு
இரண்டு வருடத்துக்கு பிறகு பவன் கல்யாண் நடிக்கும் படம் இது என்பதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தமிழில், இதன் ரீமேக்கில் அஜித்குமார் நடித்திருந்தார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஶ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உட்பட பலர் நடித்திருந்தார். ஹெச்.வினோத் இயக்கினார். கொரோனா லாக்டவுன் காரணமாக, வக்கீல் சாப் படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜாக்குலின்
இந்தப் படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் (PSPK 27) படத்தை கிரீஷ் இயக்குகிறார். இவர் தமிழில் சிம்பு, பரத் நடித்த வானம் படத்தை இயக்கியவர். பவன் கல்யாண் நடிக்கும் படத்தில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸும், நிவேதா பெத்துராஜூம் ஹீரோயின்களாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

சிவகார்த்தியேன்
இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல ஹீரோ சிவகார்த்தியேன் முக்கியமான கேரக்டரில் நடிக்க இருக்கிறாராம். இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன், கனா படத்தின் தெலுங்கு ரீமேக்கான, கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி'யில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

அயலான்
ஏற்கனவே அவர் நடித்துள்ள படங்கள், தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுன்றன. சிவகார்த்திகேயன் இப்போது, ரவிகுமார் இயக்கும் அயலான் படத்தில் நடித்துவருகிறார். இதில் ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தை அடுத்து டாக்டர் படத்தில் நடித்து வருகிறார். இதை நெல்சன் இயக்குகிறார். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











