விஜய் படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்...என்ன ரோல்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

சென்னை : லோக்கேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனை படைக்க உள்ளது. இந்த படம் இதுவரை ரூ.250 கோடிகளை வசூலித்துள்ளது.

வசூல் தொகையில் பாதி தான் உள்நாட்டில், மீதி தொகை வெளிநாட்டில் பெற்ற வசூல். தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட 16 நாட்களிலேயே அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டாலும், இரண்டிலும் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மாஸ்டர் படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் சூட்டிங் வரும் ஏப்ரல் மாதம் வெளிநாட்டில் ஆரம்பமாக உள்ளது.

விஜய்க்கு இரண்டு வில்லன்கள்

விஜய்க்கு இரண்டு வில்லன்கள்

இந்த படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடிக்க பூஜை ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரிடம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இவர்களுடன் யோகி பாபு, புகழ் ஆகியோர் நடிக்க உள்ளனர். வில்லனாக நவாசுதீன் சித்திக் மற்றும் வித்யுத் ஜம்வால் இருவரும் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் படத்தில் சிவகார்த்திகேயன்

விஜய் படத்தில் சிவகார்த்திகேயன்

தளபதி 65 பற்றி தினம் ஒரு அப்டேட் வந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்த அதிரடி அப்டேட்டாக இப்படத்தில் முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தில் விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்தது ரசிகர்களிடன் வரவேற்பை பெற்றதை போன்று, இந்த படத்தில் சிவகார்த்திகேயன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்

பாடலாசிரியரான சிவகார்த்திகேயன்

விஜய்யின் மிகப் பெரிய ரசிகரான சிவகார்த்திகேயன், டைரக்டர் நெல்சன் திலீப்குமாரின் நெருங்கிய நண்பரும் கூட. இதற்கு முன் நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் கல்யாண வயசு பாடலை சிவகார்த்திகேயன் எழுதி உள்ளார்.

விஜய்க்கு பாட்டெழுதுவாரா

விஜய்க்கு பாட்டெழுதுவாரா

கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கிய டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த படம் வரும் மார்ச் 26 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் தளபதி 65 படத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் பாடல் எழுதுவார் அல்லது நடிப்பார் அல்லது இரண்டும் செய்யவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரகசியத்தை கசியவிட்ட டான்ஸ் மாஸ்டர்

ரகசியத்தை கசியவிட்ட டான்ஸ் மாஸ்டர்

இப்படத்தில் நடன இயக்குனராக பணியாற்றும் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், சிவகார்த்திகேயன் பேனாவ எடுத்தாலே ஃபஸ்ட் பிளாக்பஸ்டர்னு தான் எழுதுவீங்க போல. அப்புறம் தான் பாட்டு எழுதுவீங்கனு நினைக்கிறேன். நெல்சன் திலீப்குமார் டி 65 பாடல் வீடியோவில் அறிவிக்க காத்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X