சிவகார்த்திகேயனிடம் அப்படி என்ன ஸ்பெஷல்: சொல்கிறார் சார்லி

By Siva

சென்னை: சிவகார்த்திகேயனிடம் உள்ள ஸ்பெஷல் என்னவென்பதை நடிகர் சார்லி கூறியுள்ளார்.

மோகன்கராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் வரும் 22ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்துள்ளார் சார்லி.

படத்தில் நடித்தது பற்றி சார்லி மனம் திறந்துள்ளார்.

நல்ல குணம்

நல்ல குணம்

சிலரிடம் பழகிய வேகத்தில் அவர்களுடன் நெருக்கமாகிவிடுவோம். சிவகார்த்திகேயனுடன் பழகினால் உடனே நெருக்கமாகிவிடுவோம். அதற்கு காரணம் அவருடைய எளிமை, நல்ல குணம் என்கிறார் சார்லி.

வித்தியாசம்

வித்தியாசம்

சிவகார்த்திகேயனின் நல்ல குணத்தால் அவர் வித்தியாசமானவராக உள்ளார். அவரின் எளிமை குணத்தால் நான் அவருடன் நட்பாகிவிட்டேன். அந்த நட்பால் எங்களின் கதாபாத்திரம் மேலும் சிறப்பாக வந்துள்ளது என்று சார்லி தெரிவித்துள்ளார்.

மகன்

மகன்

மகன் எடுக்கும் முடிவுகள் சரியாகத் தான் இருக்கும் என்று நம்பி அவரை ஆதரிக்கும் தந்தையாக நான் வேலைக்காரன் படத்தில் நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார் சார்லி.

ஆவல்

ஆவல்

சிவகார்த்திகேயன், நயன்தாரா முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த ஜோடியை பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X