ரஜினியின் அல்டிமேட் ஆஃபர்... தெறிக்கவிட காத்திருக்கும் சிவகார்த்திகேயன்... ஜெயிலரில் அடுத்த ட்விஸ்ட்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் இந்தப் படத்தில் பெரிய நட்சத்திரக் கூட்டணியே இணைந்துள்ளது.
மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும் ஜெயிலரில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆஃபரை சூப்பர் ஸ்டார் ரஜினியே சிவகார்த்திகேயனுக்கு கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முத்துவேல் பாண்டியனின் சம்பவம்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்பட ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. ரஜினியுடன் மோகன்லால், சிவ ராஜ்குமார் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சில தினங்களாகவே ரஜினியுடன் மோகன்லால், சிவ ராஜ்குமார் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வந்தன. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. ரஜினி இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலரில் இணையும் சிவகார்த்திகேயன்
ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது. இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயனும் ஜெயிலரில் ரஜினியுடன் கைகோர்ப்பதாக சொல்லப்படுகிறது. ஜெயிலர் ஷூட்டிங் ஆரம்பிக்கும் போதே ரஜினியுடன் சிவகார்த்திகேயனும் நடிப்பதாக செய்திகள் வெளியாகின.

நெல்சனின் விருப்பமும் ரஜினியின் ஆஃபரும்
சிவகார்த்திகேயன் - நெல்சன் காம்போவில் வெளியான டாக்டர் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின்னரே நெல்சனுக்கு பீஸ்ட், ஜெயிலர் பட வாய்ப்புகள் கிடைத்தன. இதனால் ஜெயிலர் ஷூட்டிங் தொடங்கும் முன்னரே சிவகார்த்திகேயனை இதில் நடிக்க வைக்கலாம் என ரஜினியிடம் நெல்சன் கூறியுள்ளாராம். ஆனால், அதற்கு அதனை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என ரஜினி சிக்னல் கொடுத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்
இந்நிலையில், தற்போது ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் என அடுத்தடுத்து டாப் ஹீரோக்களை தட்டித் தூக்கியுள்ளார் நெல்சன். இதனையடுத்து தற்போது சிவகார்த்திகேயனையும் ஜெயிலர் படத்தில் இணைத்துக்கொள்ள ஓக்கே கூறியுள்ளார் ரஜினி. ஆனால், நடிகராக இல்லாமல் பாடலாசிரியராக என்ட்ரி கொடுக்கிறாராம். விஜய்யின் பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து, சூர்யாவின் எதற்கும் துணிந்தவனில் சும்மா சுர்ருன்னு போன்ற பாடல்கள் மூலம் மாஸ் காட்டினார் சிவகார்த்திகேயன். இதன் தொடர்ச்சியாக தற்போது ரஜினிக்கும் லிரிக்ஸ் எழுத ரெடியாகிவிட்டார் எஸ்கே.

ரசிகர்கள் எமோஷனல்
சிவகார்த்திகேயன் - அனிருத் காம்போவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக உருவாகும் இந்தப் பாடலை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர். மேலும், சிவகார்த்திகேயன் எழுதுவது தான் ரஜினியின் இன்ட்ரோ பாடலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதேநேரம் ஜெயிலர் படத்திற்காக பாடல் எழுதியதில் கிடைத்த சம்பளத்தை, மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு கொடுத்துவிடவுள்ளாராம் சிவகார்த்திகேயன். இந்த தகவல்கள் வைரலாகி வருவதைப் பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள், ரொம்பவே எமோஷனலாக உள்ளனர்.

விரைவில் ரிலீஸ் அப்டேட்
ஜெயிலர் ஷூட்டிங் விரைவில் முடியவுள்ளதால் படத்தின் முதல் பாடல் அல்லது டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரிலீஸ் தேதி என்னவென்பதை தெரிந்துகொள்ளவும் ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். முதலில் ஏப்ரல் 14ம் தேதி ஜெயிலர் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், தற்போதைய தகவலின் படி ஜூன் மாதத்திற்குப் பிறகே ஜெயிலர் ரிலீஸாகும் என சொல்லபப்டுகிறது.


Click it and Unblock the Notifications











