Udayanidhi :உதயநிதியால் தள்ளிப் போகும் சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி படங்கள்.. ரசிகர்கள் ஏமாற்றம்!

சென்னை : நடிகர் உதயநிதி -மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் மாமன்னன். இநத்ப் படத்தில் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து உதயநிதியின் மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ்.

Sivakarthikeyan, Jayam ravi movies release postponed because of Udayanidhi?

இந்தப் படம் வரும் ஜூன் மாதம் 29ம் தேதி பக்ரீத் பண்டிகையையொட்டி ரிலீசாகவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதயநிதியின் மாமன்னன் படம் ரிலீஸ் : நடிகர் உதயநிதி சினிமாவில் தன்னுடைய பயணத்தை துவங்கி, தற்போது சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற படத்தில் இணைந்துள்ளார் உதயநிதி. இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுவரும் உதயநிதி, மாமன்னன் படத்தை தொடர்ந்து படங்களில் நடிக்க மாட்டார் என்று முன்னதாக தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், இந்தப் படம் மற்றம் படத்தின் கூட்டணி அதிகமான எதிர்பார்ப்புகளை ஏற்படுததியுள்ளன. படத்தில் உதயநிதிக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாகியுள்ள நிலையில், மேலும் வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், விரைவில் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே படம் வரும் ஜூன் மாதம் 29ம் தேதி பக்ரீத் பண்டிகையையொட்டி ரிலீசாகவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ள நிலையில் அதிகமான தொகை கைமாறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே சிவகார்த்திகேயனின் மாவீரன் மற்றும் ஜெயம்ரவியின் இறைவன் ஆகிய படங்கள் ஜூன் மாத ரிலீசுக்காக முன்னதாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தப் படங்கள் ரிலீசாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவீரன் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இந்தப் படம் ஜூலை 28ம் தேதி ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும் விரைவில் படக்குழுவினர் அப்டேட் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் அதிதி ஷங்கர், மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. முன்னதாக டாக்டர், டான் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் படம் சொதப்பிய நிலையில், தற்போது மாவீரன் படத்தை அவர் அதிகமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X