சந்தானம் பட இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்... வெளியானது புது அப்டேட்!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து சந்தானம் பட இயக்குனருடன் இணைய உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

டாக்டர் மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் சமீபத்தில் டாக்டர் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் முற்றிலும் முடிவடைந்து உள்ளதாக அறிவித்திருந்தார்.

இயக்குனர் அட்லியின் உதவியாளர் இயக்கும் புதிய படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இப்பொழுது சந்தானம் பட இயக்குனருடன் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரெமோ

ரெமோ

சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் நல்ல வசூலை ஈட்டி வரும் நிலையில் இவரது படங்கள் மற்ற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. குறிப்பாக ரெமோ திரைப்படம் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அனைவரையும் கவர்ந்து சிவகார்த்திகேயன் மிகவும் பிரபலமானார்.

இவரது ஃபார்முலாவில்

இவரது ஃபார்முலாவில்

தன்னுடைய ஒவ்வொரு திரைப்படங்களின் மூலமும் ரசிகர்களை மகிழ்விப்பதையே தாரக மந்திரமாக கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் ஹீரோ கலந்த காமெடி கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வர சமூக அக்கறை உள்ள பல படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் வேலைக்காரன் மற்றும் ஹீரோ போன்ற திரைப்படங்கள் இவரது ஃபார்முலாவில் இருந்து சற்று விலகி சமூக அக்கறையுடன் இருந்த நிலையில் அனைவரிடத்திலும் பாராட்டுகளையும் பெற்றது.

டப்பிங் வேலைகளை

டப்பிங் வேலைகளை

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் குடும்பப் பின்னணியை கொண்டு கடைசியாக வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்த நிலையில் எப்போது கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் இயக்கும் டாக்டர் திரைப்படத்தில் நடித்து அதன் டப்பிங் வேலைகளையும் முடித்துக் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

கிராபிக்ஸ் பணிகள்

கிராபிக்ஸ் பணிகள்

இன்று நேற்று நாளை இயக்குனரின் அயலான் திரைப்படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயனுக்கு அதில் ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடித்து வர இது ஒரு சயின்டிஃபிக் திரைப்படமாக இருப்பதால் படப்பிடிப்புகள் முடிவுற்றும் கிராபிக்ஸ் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தனது அடுத்த திரைப்படத்தை பற்றிய அறிவிப்பையும் சமீபத்தில் அதிகாரபூர்வமாக வெளியாகியிருந்தது.

அட்லியின் உதவியாளர்

அட்லியின் உதவியாளர்

கமர்சியல் மாஸ் இயக்குநர் அட்லியின் உதவியாளர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் அறிமுக திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க கல்லூரி சம்பந்தப்பட்ட கதையாக உருவாகி வரும் இந்த படத்திற்கு டான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அப்டேட் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்திய நிலையில் இப்பொழுது சந்தானம் நடித்து வரும் டிக்கிலோனா படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தனது அடுத்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டிக்கிலோனா

டிக்கிலோனா

டிக்கிலோனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகும் கார்த்திக் யோகி இதற்கு முன் ஒரு சில திரைப்படங்களில் நடிகராகவும் வந்து சென்றிருக்க கலகலப்பான காமெடி திரைப்படமாக உருவாகிவரும் டிக்கிலோனா விரைவில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் சிவகார்த்திகேயனை சந்தித்து கதையைக் கூற கதை மிகவும் பிடித்துப்போய் ஓகே சொல்லிவிட்டாராம் சிவகார்த்திகேயன் எனவே அடுத்த திரைப்படத்தை கார்த்திக் யோகி இயக்க அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X