விஜய்க்கு இணையான வியாபாரம்... கில்லியாக நிற்கும் சிவகார்த்திகேயன்!

By Shankar

24ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி. ராஜா தயாரிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'வேலைக்காரன்' இன்று உலகம் முழுவதும் வெளியானது.

இந்தப் படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையைத் தரும் என கூறப்படுகிறது. ரிலீசுக்குப் பிறகு வருகிற ரிப்போர்ட்களும் அப்படித்தான் சொல்கின்றன.

Sivakarthikeyan joins in BO elite club

தமிழ்நாடு, வெளிநாட்டு உரிமைகள் அவுட் ரேட் அடிப்படையில் வியாபாரம் செய்யப்பட்டு உள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கான உரிமை எதிர்பார்த்த விலைக்கு வியாபாரம் முடியாததால் தயாரிப்பு நிறுவனமே நேரடியாக ரீலீஸ் செய்கிறது.

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, சேலம் ஆகிய விநியோக பகுதிகளில் 260 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், பிற பகுதிகளில் 250 தியேட்டர்களிலும் வேலைக்காரன் வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக ரஜினிகாந்த், அஜீத் குமார், விஜய் ஆகியோர் நடித்த படங்களை 400 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்வது வாடிக்கை. அந்த வரிசையில் தற்போது வேலைக்காரன் படம் இணைத்துள்ளது.

அதே போன்று சிவகார்த்திகேயன் நடித்த படங்களுக்கு அதிகாலை சிறப்புக் கட்சி இதுவரை திரையிடப்பட்டது இல்லை. முதன் முறையாக வேலைக்காரன் படம் தமிழகம் முழுவதும் அதிகாலை சிறப்புக் காட்சி காலை 4.30 மணிக்கும் சில இடங்களில் 6.30 மணிக்கும் திரையிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரஜினி - கமல், அஜீத்- விஜய் என இருந்த தமிழ் சினிமா வியாபாரம் வசூல் வட்டத்திற்குள் சிவகார்த்திகேயனும் இணைந்துன்ளார்.

வேலைக்காரன் வியாபாரம் மெர்சலுக்கு முந்தைய விஜய் படங்களுக்கு இணையாக செய்யப்பட்டு உள்ளது. வேலைக்காரன் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியடைந்தால். நடிகர் விஐய் படங்களுக்கு இணையாக சிவகார்த்திகேயன் பட வர்த்தமுகம் இனி நடக்கும் என்று சினிமா வியாபார வட்டம் தெரிவிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X