புது இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்... செம அப்டேட்!

சென்னை : டாக்டர், அயலான் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்பொழுது புது இயக்குனர் ஒருவருடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் டாக்டர் திரைப்படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் அதைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமாரின் அயலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவ்விரு திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் எந்த இயக்குனருடன் இணைவார் என பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் தேசிங் பெரியசாமி பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் இப்பொழுது புது இயக்குனர் இயக்கத்தில் நடிக்கிறார் என பிரபல தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

அனைவரிடத்திலும் கூடியுள்ளது

அனைவரிடத்திலும் கூடியுள்ளது

சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களுக்கான ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகும் நிலையில் இவரின் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் அனைவரிடத்திலும் கூடியுள்ளது.

வேலைக்காரன்

வேலைக்காரன்

காதல் காமெடி என திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த சிவகார்த்திகேயன் இப்பொழுது பல்வேறு வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதற்கு சான்றாக சமீபத்தில் வெளியான வேலைக்காரன், ரெமோ, ஹீரோ உள்ளிட்ட படங்கள் ஆகும்.

நெல்சன் இயக்கத்தில்

நெல்சன் இயக்கத்தில்

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான" நம்ம வீட்டு பிள்ளை" ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவர் அடுத்து தனது நண்பரும் இயக்குனருமான நெல்சன் இயக்கத்தில் "டாக்டர் " திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் வெளியாக

விரைவில் வெளியாக

டாக்டர் திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சக்கைப் போடு போட்டு ரசிகர்களை கவர்ந்த நிலையில் இப்பொழுது டப்பிங் வேலைகளும் முழு மூச்சுடன் நடைபெற்று விரைவில் வெளியாக தயாராகிக்கொண்டிருக்கிறது.

அயலான்

அயலான்

இந்நிலையில் "டாக்டர்" படத்தை முடித்த கையோடு "இன்று நேற்று நாளை" திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமாரின் சயின்டிஃபிக் திரைப்படமான " அயலான்" திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

தேசிங் பெரியசாமி

தேசிங் பெரியசாமி

இவ்விரு திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இணைய உள்ள திரைப்படத்தின் அப்டேட்களை ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் அதில் இயக்குனர் விக்னேஷ் சிவன், தேசிங் பெரியசாமி உள்ளிட்ட இயக்குனர்களின் பெயர்கள் அடிபட இப்பொழுது புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

அறிமுக இயக்குனர்

அறிமுக இயக்குனர்

இந்நிலையில் லைகா தயாரிப்பு நிறுவனம் சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் இணைய உள்ள படத்தின் பட்ஜெட் அதிகமாக இருப்பதால், இப்பொழுது அறிமுக இயக்குனர் ஒருவரின் திரைப்படத்தை லைகா தயாரிப்பதாகவும் அதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிப்பதாகவும் உறுதிபடுத்தியுள்ளது.

Recommended Video

வடிவேல் பாலாஜி குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற நடிகர் சிவகார்த்திகேயன்
சிபி சக்கரவர்த்தி

சிபி சக்கரவர்த்தி

அவ்வாறு புது இயக்குனராக களம் இறங்குபவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த "சிபி சக்கரவர்த்தி" என்பவராவார். இவ்வாறு அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த ரொமாண்டிக் காதல் திரைப்படம் என்றும் சிவகார்த்திகேயனுக்கு மற்றுமொரு பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமையும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X