அனிருத்தை கழட்டிவிடுகிறாரா சிவகார்த்திகேயன்? - அடுத்தடுத்த படங்களில் கூட்டணி மிஸ்ஸிங்!

By Vignesh Selvaraj

Recommended Video

ஒன்று கூடும் தனுஷ் சிவகார்த்திகேயன் அனிருத் ஜோடி!

சென்னை : இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அடுத்து 'இன்று நேற்று நாளை' படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. சிவகார்த்திகேயன் படத்திற்கு இசைப்புயல் இசையமைப்பது இதுவே முதல் முறை. தொடர்ந்து இசையமைத்து வந்த அனிருத் இதில் கமிட் ஆவார் எனக் கருதப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Sivakarthikeyan left out anirudh?

இந்தப் படத்தையடுத்து இயக்குனர் ராஜேஷுடன் கூட்டணி அமைக்கிறார் சிவகார்த்திகேயன். ஜூலை மாதம் ஷூட்டிங் தொடங்கவிருக்கும் இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைப்பாளர்களாக கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.

பொன்ராம் இயக்கிய சிவகார்த்திகேயன் படங்களில் டி.இமான் இசையமைத்து வந்தார். சிவகார்த்திகேயன் நடித்து வெளியானவற்றில் கிட்டத்தட்ட பாதி படங்களில் அனிருத் தான் இசையமைப்பாளர். அனிருத் தனது கேரியரில் இசையமைத்த படங்களில் மூன்றில் ஒரு பங்கு சிவகார்த்திகேயனுக்காகத்தான்.

தனுஷ் அனிருத்துடன் மோதல் ஏற்பட்டு பிரிந்த பிறகும் கூட சிவகார்த்திகேயன் அனிருத்துடன் நெருக்கமாகவே இருந்து வந்தார். இந்நிலையில், அடுத்தடுத்து சில படங்கள் அனிருத்தை விட்டுச் செல்வதால் இருவருக்கும் இடையே என்ன நடக்கிறது எனப் புரியாமல் குழம்பியுள்ளனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X