Maaveeran update : சிவகார்த்திகேயன் செய்த தரமான சம்பவம்…மாவீரன் தெறி அப்டேட் !
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் மாவீரன் திரைப்படம் குறித்து தரமான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
மாவீரன் திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் உருவாகிறது.
மாவீரன் படத்தில் வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் : இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். இப்படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், நடிகர் சுனில், இயக்குநர் மிஸ்கின், யோகி பாபு, சரிதா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கவந்த அதிதி ஷங்கர், இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
வதந்தி : இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில், சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் பரவியது. ஆனால், அது வெறும் வதந்தி படப்பிடிப்பு நடந்து வருவதாக சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியின் போது விளக்கம் கொடுத்திருந்தார்.
ஜூலை 14ந் தேதி ரிலீஸ் : இதையடுத்து, மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் சூப்பர் ஸ்டார் நடித்த ஜெயிலர் படம் வெளியாகும் என்ற பேச்சு எழுந்ததால், மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஜூலை 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தரமான அப்டேட் : இந்நிலையில் மாவீரன் திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி வருகிறது. கடந்த வாரம் வீரமே ஜெயம் என்று டப்பிங் பணியை தொடங்கி சிவகார்த்திகேயன் தற்போது டப்பிங் பணியை முடித்துள்ளார் இதுகுறித்த வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. மாவீரன் படம் குறித்து அடுத்தடுத்து வெளியாகி வரும் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

இரண்டு மொழியில் : மாவீரன் திரைப்படம் தெலுங்கு மொழியில் மாவீரடு என்ற பெயரில் உருவாகி வருகின்றது. மாவீரன் திரைப்படம் ஜூலை மாதம் 14ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ள நிலையில், மாவீரன் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SK 21 : டான், பிரின்ஸ் என அடுத்தடுத்த இரண்டு படங்கள் தோல்வியைத் தழுவியதால், அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்ததேஆக வேண்டிய கட்டாயத்தில் சிவகார்த்திகேயன் இருக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளர். இப்படத்தைஉலக நாயகனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. இந்தப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











