Sivakarthikeyan: சிவகார்த்திகேயன், AR முருகதாஸ் கூட்டணியில் மோகன்லால்... ஹாலிவுட் ஸ்டைலில் SK 23!

சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார். கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிவா நடிக்கவுள்ள எஸ்கே 23 படம் குறித்து மாஸ்ஸான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயனுடன் இணையும் மோகன்லால்: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அயலான் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக விரைவில் எஸ்கே 21 வெளியாகவுள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். எஸ்கே 21 டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இரண்டும் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Sivakarthikeyan: Malayalam Super Star Mohanlal On Board in Sivakarthikeyans SK 23

எஸ்கே 21 ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதால், விரைவில் எஸ்கே 23ல் இணையவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க, ஸ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் தயாரிக்கவுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளார் ஏஆர் முருகதாஸ். இதனால் தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என தீயாக வேலை பார்த்து வருகிறார் ஏஆர் முருகதாஸ்.

அதன்படி எஸ்கே 23 படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளாராம். ஹை ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் பாலிவுட் ஹீரோ வித்யுத் ஜம்வாலும் முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளாராம். இதனால் எஸ்கே 23 மல்டி ஸ்டார் படமாக உருவாகவுள்ளதாகத் தெரிகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக பூஜா ஹெக்டே அல்லது மிருணாள் தாகூர் நடிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், அனிருத் அல்லது தமன் இருவரில் ஒருவரை எஸ்கே 23 படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். எஸ்கே 23 படப்பிடிப்பு முழுவதையும் வெளிநாடுகளில் நடத்த ஏஆர் முருகதாஸ் முடிவு செய்துள்ளார். அதேநேரம் இந்த மாதமே எஸ்கே 23 பூஜையை நடத்த படக்குழு ரெடியாகி வருகிறது.

எஸ்கே 23ல் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு தரமான ஆக்‌ஷன் ட்ரீட் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி மொத்தம் 5 ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும் எனவும், எல்லாமே ஹாலிவுட் ஸ்டைலில் படமாக்கவும் பிளான் செய்யப்பட்டுள்ளதாம். எஸ்கே 23 ஷூட்டிங் தொடங்கும் முன்பே ஏஆர் முருகதாஸ் புதிய பிஎம்டபிள்யூ கார் வாங்கி அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X