தெலுங்கு ஆடியன்சை கவர பக்கா பிளான்..சிவகார்த்திகேயனின் அடுத்த அதிரடி!

சென்னை : பிரின்ஸ் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன் தெலுங்கு ஆடியன்சை கவர பக்காவாக பிளான் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் இறுதியாக நெல்சனின் இயக்கத்தில் உருவான டாக்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் 100 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் திரைப்படம் வெளியாக உள்ளது.

பிரின்ஸ்

பிரின்ஸ்

தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வரும் பிரின்ஸ் படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளார்கள். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகிறது.

இத்தனை கோடி சம்பளமா?

இத்தனை கோடி சம்பளமா?

இந்த படத்தின் படப்பிடிப்புகள் மொத்தம் 45 நாட்கள் நடத்தப்பட்ட நிலையில் அதில் 23 நாட்களில் மட்டுமே சிவகார்த்திகேயனுக்கு ஷூட்டிங் இருந்ததாகவும், இந்த 23 நாள் ஷூட்டிங்ற்காக நடிகர் சிவகார்த்திகேயன் மொத்தம் 26 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகின. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் டீசர் வெளியாக உள்ளது.

நல்ல பிளான்தான்

நல்ல பிளான்தான்

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தெலுங்கு ஆடியன்சை கவர பக்காவாக பிளான் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இருமொழியில் உருவாகி வரும் இத்திரைப்படத்திற்கு சிவகார்த்திகேயன் தனது சொந்த குரலிலேயே தெலுங்கில் டப்பிங் பேசவுள்ளதாக தகவல் வெளியாவுள்ளது. மேலும், சரளமாகவும் தெளிவாகவும் பேசுவதற்காக தெலுங்கு கற்றுக்கொண்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். டான் படம் போலவே இப்படமும் நல்ல வரவேற்பு பெறும் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

தருமபுரி To Kannada Cinema | Youtuber Patta Murugan Exclusive Interview
மாவீரன்

மாவீரன்

பிரின்ஸ் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார். மேலும், முக்கிய கேரக்டர்களில் யோகிபாபு, மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X