சிவகார்த்திகேயனைச் சந்தித்த அன்பே டயானா டீம்.. கமர்ஷியல் நாயகனே பாராட்டிட்டாரே

சென்னை: இயக்குநர் பாரி இளவழகன் எழுதி, இயக்கி, நடித்துள்ள திரைப்படம் 'அன்பே டயானா'. மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இன்று (ஜூலை 17) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரிலீஸுக்கு முன்பாக நடைபெற்ற பிரீமியர் காட்சியிலேயே படம் நல்ல வரவேற்பைப் பெற்றதாக கூறப்படும் நிலையில், தற்போது படக்குழுவினர் நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

'அன்பே டயானா' படக்குழுவினரை தனது அலுவலகத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்தார். இயக்குநரும், கதாநாயகனுமான பாரி இளவழகன், படத்தின் கதாநாயகி உள்ளிட்ட படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

பொதுவாக புதிய திறமைகளை ஊக்குவிப்பதில் ஆர்வம் காட்டி வரும் சிவகார்த்திகேயன், 'அன்பே டயானா' படக்குழுவினரையும் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது படத்தின் உருவாக்கம் குறித்தும், படக்குழுவினரின் முயற்சி குறித்தும் அவர் பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan Meets Anbe Diana Team Praises Pari Elavazhagan s Commercial Entertainer

ஏற்கனவே 'அன்பே டயானா' திரைப்படத்தின் பிரீமியர் காட்சியை பார்த்த ரசிகர்கள், சமூக வலைதளங்களில் நேர்மறையான கருத்துகளை பகிர்ந்து வந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனின் வாழ்த்தும் கிடைத்திருப்பது படக்குழுவினருக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.

ஊக்கம்: இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், "சிவகார்த்திகேயன் வாழ்த்து சொன்னதாலே படக்குழுவுக்கு பெரிய ஊக்கம் கிடைத்திருக்கிறது", "நல்ல படைப்பாளிகளுக்கு எப்போதும் ஆதரவாக நிற்பவர் சிவகார்த்திகேயன்" என்று ரசிகர்களும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Sivakarthikeyan Meets Anbe Diana Team Praises Pari Elavazhagan s Commercial Entertainer

படக்குழு நம்பிக்கை: இந்நிலையில், நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'அன்பே டயானா' திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் அடுத்தடுத்த நாட்களிலும் கவனம் ஈர்க்குமா என்ற எதிர்பார்ப்பு சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஆனால் படத்தின் ப்ரீமியர் ஷோவிற்குப் பின்னர் சமூக வலைதளங்களில் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் படத்தின் புக்கிங் அதிகரித்துள்ளது. இதனால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளனர். பாரி இளவழகன் எழுதி, இயக்கி, நடித்த ஜமா படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறவில்லை. ஆனால் படத்திற்கு உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்றது. இதனால் தன்னால் கமர்ஷியல் ஹிட்டும் கொடுக்க முடியும் எனக் காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்திலேயே இந்த படத்தை எடுத்துள்ளார் பாரி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X