அண்ணனுக்காக ஓடி வந்த சிவகார்த்திகேயன்.. சூரி மேல இப்படியொரு பாசமா.. கலகலப்பான மாமன் படக்குழு
சென்னை: விடுதலை படத்திற்கு பிறகு காமெடி கதாப்பாத்திரத்தில் நடிப்பதை குறைத்துக்கொண்ட சூரி அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடு்தது ஹீரோவாக நடித்து வருகிறார். கருடன் படத்தை தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் வகையில் மாமன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், மாமன் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் அவரது சினிமா திரையுலகில் செல்ல தம்பி என பேசும் முக்கியமான பிரபலம் திடீர் விசிட் அடித்திருக்கிறார். தற்போது அதுதொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
கருடன் படத்திற்கு பிறகு சூரி நடிப்பில் உருவான கொட்டுக்காளி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஆணாதிக்க மனோபாவம் கொண்டவராக சூரி நடித்திருப்பார். இதுபோன்று வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில், விலங்கு வெப் தொடர் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரசாந்த் பாண்டியராஜ் மாமன் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, லப்பர் பந்து நடிகை சுவாசிகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

சூரிக்கு சர்ப்ரைஸ்: தாய்மாமன் உறவை பற்றி பேசும் படமாக உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சூரியை சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இதை பார்த்து நெகிழ்ந்து போன சூரி அவரை கட்டியணைத்து வரவேற்றார் இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்ணனுக்காக தம்பி வந்திருக்கிறேன் என்றும் தம்பியை நினைத்து பெருமைப்படுவது போன்று கேப்சனும் இடம்பிடித்துள்ளன.
ஹிட் காம்போ: சிவகார்த்திகேயன் -சூரி காம்போவில் ஆரம்பக்காலகட்டத்தில் மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, டான் போன்ற படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்தால் அப்படம் கலகலப்பான காமெடியாகத்தான் இருக்கும். படத்தில் இருப்பதுபோன்றே இருவரும் ஆப் ஸ்கீரினிலும் ரொம்ப ஜாலியாக இருக்க கூடியவர்கள். படத்தில் இருந்தே இருவருக்குமான உறவு நீடித்து வருகிறது. கருடன் பட விழாவில் வந்து பேசிய சிவகார்த்திகேயன், விடுதலை படம் வாய்ப்பு கிடைத்தபோது அண்ணன் யோசிக்காதீர்கள் உடனே படத்தில் நடிங்க என்று ஊக்கம் அளித்தேன். இதை அவர் எண்ணிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், தன்னை அவர் தம்பியாக நினைப்பதால் கேட்டார்.
அண்ணன் -தம்பி : சூரி எப்போதும் சிவகார்த்திகேயனை செல்லமாக தம்பி என்றே அழைப்பார். சீமராஜா படம் வெளியான சமயத்தில் பல்வேறு விதமான விமர்சனங்களை எதிர்கொண்டார் சிவகார்த்திகேயன். அப்போது அவருக்கு ஆதரவாக பேசிய சூரி, தம்பி சிவா தப்பான படம் நடித்திருந்தால் நீங்கள் திட்டலாம். ஆனால், படம் சரியில்லை என்றால் சொன்னால் பிரச்னை இல்லை. ஆனால், சிவகார்த்திகேயனை டார்கெட் செய்து திட்டுவது முறையற்றது என்றே தெரிவித்தார் சூரி. படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயனும், சூரியும் இருந்தால் அந்த பக்கம் போகாதீங்க அவங்க 2 பேரும் நம்மளை வைத்து கலாய்க்க தொடங்கிடுவார்கள் என்று சொல்லும் அளவிற்கு சேட்டை செய்துள்ளனர்.
சிவகார்த்திகேயனின் திடீர் சந்திப்பு எதற்கு என்று தெரியவில்லை. மாமன் படப்பிடிப்பு தளத்தில் சூரியை சிவகார்த்திகேயன் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அண்ணன் தம்பி பாசம்னா இதுதான் என கமெண்ட் செய்கின்றனர்.


Click it and Unblock the Notifications











