»   »  சிவகார்த்திகேயன் படத்திற்கு ரஜினி பட தலைப்பு: தனுஷுக்கு போட்டியா?

சிவகார்த்திகேயன் படத்திற்கு ரஜினி பட தலைப்பு: தனுஷுக்கு போட்டியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு ரஜினி பட தலைப்பை தேர்வு செய்துள்ளார்களாம்.

சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து குறுகிய காலத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் சிவகார்த்திகேயன். அவர் பெண் வேடம் போட்டு நடித்த ரெமோ படம் சூப்பர் ஹிட்டானது.

ரெமோ படத்தை பார்த்தவர்கள் அனைவரும் சிவகார்த்திகேயனை பாராட்டினார்கள்.

மோகன் ராஜா

மோகன் ராஜா

ரெமோவை அடுத்து சிவா மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். ஹீரோக்களுடன் ஜோடி சேர்வது இல்லை என்று முடிவு செய்துள்ள நயன் சிவாவுடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அனிருத்

அனிருத்

படத்திற்கு சிவாவின் நெருங்கிய நண்பரான அனிருத் இசையமைக்கிறார். நடிகை நஸ்ரியாவின் கணவரும், பிரபல மலையாள நடிகருமான ஃபஹத் ஃபாசிலும் சிவா படத்தில் நடிக்கிறார்.

வேலைக்காரன்

வேலைக்காரன்

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்திற்கு வேலைக்காரன் என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி நடித்த படத்தின் தலைப்பு தான் வேலைக்காரன் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி

ரஜினி

தற்போது எடுக்கப்படும் படங்களுக்கு ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன் ஆகியோரின் படங்களின் தலைப்பை பயன்படுத்துவது டிரெண்டாகிவிட்டது. சிபிராஜ் நடிக்கும் படத்திற்கு கமலின் சத்யா பட தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

English summary
Buzz is that Sivakarthikeyan's upcoming movie being directed by Mohan Raja will be titled Velaikaran. It is noted that Velaikaran was Rajinikanth's movie title.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil