ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியான சிவகார்த்திகேயன் பட நாயகி.. அடுத்த 1000 கோடி படம்?
சென்னை: நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான தேவரா படம் மிகச் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் பாலிவுட்டில் தற்போது வார் 2 படத்தில் நடித்து வருகிறார், இதன்மூலம் அவர் பாலிவுட்டில் தன்னுடைய என்ட்ரியை கொடுக்கவுள்ளார். படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.
ஸ்பை ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தில் ஹிரித்திக் ரோஷன் நாயகனாக நடித்து வருகிறார். படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குநர் பிரசாந்த் நீலுடன் அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் இணைய உள்ள படத்தின் சூட்டிங் இம்மாதம் இரண்டாவது வாரத்தில் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகி குறித்தும் படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ஜூனியர் என்டிஆர்: நடிகர் ஜூனியர் என்டிஆர்: நடிகர் ஜூனியர் என்டிஆரின் அடுத்தடுத்த படங்கள் இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் கவனத்தை பெற்று வருகின்றன. கடந்த ஆண்டில் அவரது நடிப்பில் வெளியான தேவரா படம் 500 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் இணைந்திருந்தார். அனிருத் மிகச் சிறப்பான பாடல்களை கொடுத்திருந்தார். ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூரின் கெமிஸ்ட்ரி இந்த படத்தில் சிறப்பாக அமைந்திருந்தது. படம் சில கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் பின்னி பெடலெடுத்தது.
ஜூனியர் என்டிஆர் -பிரஷாந்த் நீல் காம்போ: இந்த படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் வார் 2 படத்தில் நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர். ஸ்பை திரில்லராக உருவாகிவரும் இந்தப் படத்தில் ஹிரித்திக் ரோஷன் ஹீரோவாக நடித்து வருகிறார். படத்தின் அடுத்தடுத்த கட்ட சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக கேஜிஎஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவும் ஜூனியர் என்டிஆர் கமிட்டாகியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இம்மாதம் இரண்டாவது வாரத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் இணைந்துள்ளார்.
ஜூனியர் என்டிஆருக்கு ஜோடி: ருக்மிணி வசந்த் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஏஸ் படத்திலும் சிவகார்த்திகேயன் -ஏஆர் முருகதாஸ் காம்பினேஷனில் உருவாகியுள்ள படத்திலும் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் இவர் அதகளம் செய்து வருகிறார். முன்னதாக கன்னடத்தில் வெளியான Sapta Sagaradaache Ello Side A மற்றும் Side B ஆகிய படங்கள் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் இதயத்தில் குடியேறியவர் ருக்மிணி. இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் மற்றும் பிரசாந்த் நீல் காம்பினேஷனில் உருவாகும் படத்தில் இவர் இணைந்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
2026 பொங்கல் ரிலீஸ்: இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் இந்தியா, பூடான் மற்றும் சீனா ஆகிய இடங்களில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த படம் படமும் கேஜிஎப் 2 படத்தை போல ஆயிரம் கோடி ரூபாய் கிளம்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்துவரும் ருக்மணி வசந்திற்கு இந்தப் படம் கேரியர் பெஸ்ட்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











