Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிவகார்த்திகேயன் ஜோடி சாய் பல்லவி இல்லை நயன்தாரா?
Recommended Video
சென்னை: வேலைக்காரன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன், நயன்தாரா மீண்டும் சேர்ந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடியாக நடித்தனர். இதன் மூலம் நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது.
இருப்பினும் மீண்டும் நயன்தாராவுடன் ஜோடி சேர விரும்புவதாக சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
ராஜேஷ்
சீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார். அதன் பிறகு ராஜேஷ் இயக்கத்தில் காமெடி படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
சாய் பல்லவி
சிவகார்த்திகேயன், ராஜேஷ் சேர்ந்து பணியாற்றும் படத்தில் சாய் பல்லவியை ஹீரோயினாக்க முடிவு செய்தததாக கூறப்பட்டது. ஆனால் சாய் பல்லவியிடம் டேட்ஸ் இல்லையாம்.
நயன்தாரா
ராஜேஷ் இயக்கும் படத்தில் நயன்தாராவை சிவாகார்த்திகேயனுக்கு ஜோடியாக்க உள்ளார்களாம். இது குறித்து நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
அஜீத்
நயன்தாரா தற்போது சிரஞ்சீவி ஜோடியாக சயீரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அஜீத்தின் விசுவாசம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.