Sivakarthikeyan: எஸ்கே 21 ஃபர்ஸ்ட் லுக் டீசர் சும்மா தாறுமாறு.. சொன்னது நம்ம நெல்சன் திலீப் குமார்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான அயலான், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றி இயக்குநர் நெல்சன் போட்டுள்ள டிவிட்டர் பதிவு செம்ம ஹப் கொடுத்துள்ளது.

SK 21 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் லோடிங்
சிவகார்த்திகேயன் - இயக்குநர் ரவிக்குமார் கூட்டணியில் உருவான அயலான் பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 21வது படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்து வருகிறது, ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

Sivakarthikeyan Nelson praised Sivakarthikeyans SK 21 first look teaser


சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கும் எஸ்கே 21 படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் தினத்தில் வெளியாகும் என சொல்லப்பட்டது. படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் குறித்து இயக்குநரும் சிவகார்த்திகேயன் நண்பருமான நெல்சன் அப்டேட் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், ”SK 21 ஃபர்ஸ்ட் லுக் டீஸரை தற்போது பார்த்தேன். அது ரொம்பவே அருமையாக வந்துள்ளது. இந்த டீசரை ரசிகர்கள் எப்படி கொண்டாட போகிறார்கள் என பார்ப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன். எஸ்கே 21 படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார். இதனால் எஸ்கே 21 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கமெண்ட்ஸில் கேட்டு வருகின்றனர்.

டாக்டர் திரைப்படம் மூலம் சிவகார்த்திகேயனுக்கு கம்பேக் கொடுத்தவர் இயக்குநர் நெல்சன் தான். டாக்டர் சூப்பர் ஹிட் ஆனதால் தான் விஜய்யின் பீஸ்ட், ரஜினியின் ஜெயிலர் படங்களை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதிலும் ஜெயிலர் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக அமைந்ததால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அவரை கொண்டாடித் தீர்த்தனர். அதேபோல், ரஜினி - நெல்சன் கூட்டணி மீண்டும் இணைவதும் அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ளது.

இதனிடையே எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயனுடன் கமல்ஹாசனையும் நடிக்க வைக்க இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பிளான் செய்து வருகிறார். கேமியோ ரோலில் ஓரிரு காட்சிகளில் மட்டும் கமல்ஹாசன் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், உலக நாயகனோ இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லையாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X