மீண்டும் களமிறங்கும் சிவா -நெல்சன் கூட்டணி... ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் டைரக்டர் நெல்சன் கூட்டணியில் நேற்றைய தினம் டாக்டர் படம் ரிலீசானது.
வெளியான அனைத்து சென்டர்களிலும் வசூல்ரீதியாக இந்தப் படம் சாதனை புரிந்துள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் இருவரும் மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் காமெடி கலந்த கேரக்டர்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் இதயங்களில் இடம்பெற்றவர். காமெடிக்காகவே இவரது படங்கள் ஓடி வசூலை வாரிக் குவித்தன. சில படங்களை இவரே தயாரித்தும் உள்ள நிலையில் இவருக்கு நல்ல இமேஜை முதல்முறையாக கொடுத்த படம் ரெமோ.

டாக்டர் படம்
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் டைரக்டர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் அனிருத் இசையில் உருவாகி நேற்றைய தினம் ரிலீசாகியுள்ளது டாக்டர் படம். இந்தப் படம் நீண்ட நாட்கள் காத்திருப்புக்கு பின்பு நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசானது. இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன.

சிறப்பான வெற்றி
இந்நிலையில் விமர்சன ரீதியாக இந்தப் படம் நல்ல பெயரை பெற்றுள்ளது. மேலும் திரையிடப்பட்ட அனைத்து சென்டர்களிலும் வசூலையும் வாரிக் குவித்துள்ளது. சிவகார்த்திகேயன் கேரியரில் மிகச்சிறந்த படமாக இந்தப் படம் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன்மூலம் படக்குழு மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளது.

நெல்சனின் அடுத்த படம்
கோலமாவு கோகிலா படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படம் அவருக்கும் நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. தற்போது விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். டாக்டர் படத்தின் வெற்றியை அடுத்து பீஸ்ட் படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

மீண்டும் இணையும் கூட்டணி
இதனிடையே நெல்சன் திலீப்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணி மீண்டும் அடுத்த படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில் விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளாகவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டத்தில் சிவா
காமெடி கலந்த ஹீரோவாக வலம்வந்த சிவகார்த்திகேயன் தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி வருகிறார். அவருக்கு இந்த டாக்டர் படம் அடுத்த கட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் வெற்றிக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளது சிறப்பானதாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications