Sivarkarthikeyan Net worth: 38 வயதில் சிவகார்த்திகேயன் சேர்த்த மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சென்னை: கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சாதாரண காமெடியனாக விஜய் டிவிக்குள் வந்து தனது திறமையால் அங்கேயே தொகுப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன், இதுவே போதும் நமக்கு என அங்கேயே செட்டில் ஆகாமல் தொடர்ந்து போராடி மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஹீரோ ஆகிட்டோம் ஜாலியா இருக்கலாம் என நினைக்காமல், முன்னணி ஹீரோக்கள் வரிசையில் நம் பெயரும் இடம்பெறணும் என தொடர்ந்து உழைத்ததன் பலனாக 11 வருடத்தில் சினிமாவில் சாதனை நாயகனாகவும் கோலிவுட் பிரின்ஸாகவும் 100 கோடி நாயகனாகவும் மாறி உள்ள சிவகார்த்திகேயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு? என்பது குறித்து இங்கே அலசுவோம்..

கீழ இருந்து மேல வந்துட்டானே

கீழ இருந்து மேல வந்துட்டானே

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டாகவே சிவகார்த்திகேயன் உள்ளார். பல முன்னணி நடிகர்களின் வாரிசுகள் ஹீரோவான நிலையிலும், சாதிக்க முடியாத இடத்தை சினிமா பேக்கிரவுண்டே இல்லாமல் உள்ளே நுழைந்து தனது பெரும் முயற்சியால் சாதித்து, ஏகப்பட்ட புதுமுக நடிகர்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாகவே மாறிவிட்டார்.

நாளைய கோலிவுட்டே

நாளைய கோலிவுட்டே

நாளைய கோலிவுட்டின் எதிர்காலமே என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு இளம் நடிகர்களில் அசுர வளர்ச்சி அடைந்து இளம் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக அசத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். டாக்டர், டான் என பேக் டு பேக் இரு 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் படங்களை கொடுத்து தனது முத்திரையை தமிழ் சினிமாவில் பதித்து விட்டார்.

35 கோடி சம்பளம்

35 கோடி சம்பளம்

தனுஷ், சிம்பு, விஜய்சேதுபதியை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு புதுப்படங்களுக்கு அதிகபட்சமாக நடிகர் சிவகார்த்திகேயன் 35 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மினிமம் கியாரண்டி ஹீரோவாக மாறிவிட்ட நிலையில், அவர் கேட்கும் சம்பளத்தை தர தயாரிப்பாளர்களும் ரெடியாகி வருவதாக கூறுகின்றனர்.

பூர்வீக கிராமத்தில் சொந்த வீடு

பூர்வீக கிராமத்தில் சொந்த வீடு

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னையில் சொந்த வீடு உள்ள நிலையில், சமீபத்தில் தனது பூர்வீக கிராமமான திருவீழிமிழலையில் பிரம்மாண்ட புது வீட்டை கட்டி புதுமனை புகுவிழாவையும் நடத்தி இருந்தார். அதன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

அன்பான குடும்பம்

அன்பான குடும்பம்

நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்பவரை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். ஆராதனா எனும் மகளும் குகன் தாஸ் என்கிற மகனும் உள்ளனர். மறைந்த தனது தந்தை தாஸ் தான் மகனாக பிறந்துள்ளார் என்றே மிகவும் உருக்கத்துடன் தனது குழந்தையை வளர்த்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

மாவீரன் சிவகார்த்திகேயன்

மாவீரன் சிவகார்த்திகேயன்

1985ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி பிறந்த சிவகார்த்திகேயன் இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கடந்த 2012ம் ஆண்டு மெரினா மற்றும் 3 படங்களின் மூலம் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஸீனா.. ஸீனா பாடல் வெளியாக உள்ளது.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

சினிமாவில் நுழைந்து வெறும் 11 ஆண்டுகளில் தனது கடும் உழைப்பால் வெற்றி, தோல்விகளை சந்தித்து வந்தாலும் துவண்டு விடாமல் போராடி வரும் சிவகார்த்திகேயனுக்கு ஒட்டுமொத்தமாக 110 கோடி சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். பாடல்கள் பாடுவது, எழுதுவது மற்றும் விளம்பரங்களில் நடிப்பது என பன்முகத்தன்மை கொண்ட கலைஞனாக சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் செம ஸீனா வாழ்ந்து வருகிறார்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X