Sivakarthikeyan: “அட்லீ பாலிவுட் போனாலும் திருடன் தான்..” வாய் கொடுத்து மாட்டிய சிவகார்த்திகேயன்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், அட்லீ பாலிவுட் சென்றது பற்றி பாராட்டியிருந்தார். அட்லீயிடம் மிஸ்டேக் இருந்தாலும் அவரது சாதனை பெரியது என பேசியிருந்த சிவகார்த்திகேயனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
அட்லீயால் வம்பில் சிக்கிய சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் உருவாகும் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் அவரது அயலான் திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம், பலகட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரவிக்குமார் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள அயலான், ஏலியன்ஸை பின்னணியாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் ஜானர் படமாக உருவாகியுள்ளது. பொங்கலை முன்னிட்டு தனுஷின் கேப்டன் மில்லருக்கு போட்டியாக அயலான் வெளியாகவுள்ளது. கடந்த வாரம் அயலான் இசை வெளியீட்டு விழா நடைபெற்றதை அடுத்து வரும் 5ம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் அயலான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், இயக்குநர் அட்லீ குறித்து பேசியது வைரலாகி வருகிறது. அதாவது அட்லீ அவரது சாதனைகளை அவரே முறியடித்து வருகிறார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற அட்லீ, ஷாருக்கானை ஹீரோவாக நடிக்க வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அதுமட்டும் இல்லாமல் இந்தப் படம் 1200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது.
இதனை பாலிவுட்டே கொண்டாடும் போது, தமிழ்த் திரையுலகமும் அட்லீயின் வெற்றியை கொண்டாடியிருக்க வேண்டும். அதேநேரம் அட்லீ இயக்கும் படங்கள் மீதும், கதை குறித்தும் விமர்சனங்கள் இருக்கின்றன. அதற்காக நாம் அட்லீயை விட்டுக்கொடுத்துவிட முடியாது. அதேபோல் அவர் பாலிவுட் சென்றுவிட்டதால் நமக்கு தான் பெரிய இழப்பு எனவும், விரைவில் அட்லீயும் விஜய்யும் இணைந்து சூப்பர் ஹிட் கொடுப்பார்கள் என்பதாகவும் பாராட்டியிருந்தார்.
இதனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்துள்ளனர். "சாரி ப்ரோ! அட்லி இல்லாமயே தமிழ் சினிமா நல்லாதான் இருக்கு. இந்தி இல்லை, உலகத்துல எங்கபோனாலும் திருடன் திருடன்தான். Avoid Toxic positivity!" என வெளுத்து வாங்கியுள்ளனர். அட்லீ இதுவரை இயக்கிய எல்லா படங்களுமே கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருந்தன. முக்கியமாக ஜவான் பல படங்களில் இருந்து கதைகளை திருடி உருவாகியுள்ளதாக ரசிகர்கள் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











