இமான் இசையில் பாடிய சிவகார்த்திக்கேயன்

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் மெரினா படம் மூலம் ஹீரோவானார். 3, மனம் கொத்திப் பறவை, கேடிபில்லா, கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் என சிவகார்த்திக்கேயன் நடித்த அனைத்து படங்களுமே வெற்றிபெற்றுள்ளன.
நடிப்போடு நகைச்சுவைத் திறனும் இருப்பதால் ரசிகர்களுக்கு சிவகார்த்திக்கேயனை பிடித்துப்போனது. இப்போது கைவசம் சில படங்களை வைத்துள்ளார். அதில் ஒன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம். இதில் சத்தியராஜ் உடன் இணைந்து நடிக்கிறார்.
இயக்குநர் ராஜேஸ் இயக்கும் இந்தப் படத்திற்கு இசை இமான். நடிகராக மட்டுமே இருந்த சிவகார்த்திகேயனை பாடகராக அறிமுகம் செய்துள்ளார் இமான். இதனை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து சிவகார்த்திகேயனும் டுவிட்டியுள்ளார். கமல், ரஜினி, கார்த்திக், விஜய், சிம்பு, தனுஷ், வரிசையில் சிவகார்த்திகேயனும் பாடியுள்ளார். நடிகராக ஏற்றுக் கொண்ட ரசிகர்கள் பாடகராக சிவகார்த்திகேயனை அங்கீகரிப்பார்களாக என்பதை படம் வெளியான பின்னர் தெரிந்து கொள்ளலாம்.
நகைச்சுவை கலந்த பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஜூலை மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











