இந்திய கிரிக்கெட் மேட்சிலும் ஹீரோ புரொமோஷன்.. வேற லெவலில் கெத்து காட்டும் கே.ஜே.ஆர்!
சென்னை: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே நாளை நடைபெறவுள்ள முதல் ஒரு நாள் போட்டியில் ஹீரோ படத்தின் புரொமோஷன் நிகழ்வு நடைபெறவுள்ளது.
பிளே ஹீரோ, பிரம்மாண்ட டிரைலர் வெளியீடு, ஏ.ஆர். ஃபில்டன் என வேற லெவலில் புரொமோஷன் செய்து வரும் கே.ஜே.ஆர் நிறுவனம், இன்னும் ஒரு படி மேல் சென்று, இந்தியா - மேற்கிந்திய தீவுகள் விளையாடும் கிரிக்கெட் போட்டியிலும் புரொமோஷன் செய்ய உள்ளது.

டிரெண்டிங்கில் முதலிடம்
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படம் வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீசாகிறது. நேற்று வெளியான ஹீரோ டிரைலர் யூடியூப் டிரெண்டிங்கில் 3 மில்லியன் வியூஸ் கொண்டு முதலிடத்தில் உள்ளது.

பாராட்டு
ஹீரோ டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரு மடங்காக உயர்த்தியுள்ளது. தமிழில் ஒரு பக்கா சூப்பர் ஹீரோ படமாக ஹீரோ படம் இருக்கும் என்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது. பி.எஸ். மித்ரன் ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கியுள்ளார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
என்ன சர்ப்ரைஸ்
சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெறவுள்ள இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான போட்டியை சிவகார்த்திகேயன் நேரில் காணவுள்ளார். மேலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் #StarAiKelungal என்ற ஹாஷ்டேக் மூலம் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சிவகார்த்திகேயன் பதிலளிக்கவுள்ளார்.

டஃப் கொடுக்கும் தம்பி
கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகவுள்ள சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு கார்த்தியின் தம்பி படம் பயங்கர டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜீவாவின் சீறு படம் அன்றைய தினம் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











