மாநாடு இயக்குநருக்கே மண்டை குடைச்சல்.. பராசக்தியால் சிவகார்த்திகேயன் அடுத்த படத்துக்கு சிக்கல்?
சென்னை: 20 முதல் 50 கோடி பட்ஜெட்டில் முன்னணி நடிகர்கள் படம் எடுத்தால் அந்த படம் கண்டிப்பாக 70 முதல் 100 கோடி வசூல் ஈட்டினால் கண்டிப்பாக தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூல் வேட்டையை நடத்தும் தயாரிப்பாளர்களும் நஷ்டமடைய மாட்டார்கள்.
ஆனால், நடிகர்கள் 150 கோடி, 300 கோடி பட்ஜெட்டில் படமெடுத்து விட்டு 100 கோடி வசூலுக்கே திண்டாடும் நிலையால் தான் கோலிவுட்டில் தயாரிப்பாளர்கள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இளம் நடிகர்கள் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுத்துவிட்டால் உடனடியாக அதற்கு மொத்த காரணமும் தாங்கள் தான் என்கிற நிலையில், 50 கோடி முதல் 70 கோடியாக சம்பளத்தை உயர்த்தி விடுவதால் தான் படத்தின் பட்ஜெட் அதிகரித்து சிக்கல் ஏற்படுவதாக கூறுகின்றனர். சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி பட்ஜெட்டே 140 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பராசக்தி பாக்ஸ் ஆபீஸ் சொதப்பல்: சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், சிவகார்த்திகேயன் சம்பளம் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. ஆனால், மதராஸி திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டவே சிக்கித் தவித்தது. இந்நிலையில், பராசக்தி திரைப்படம் 100 கோடி எட்டுவது சந்தேகம் தான் என்கின்றனர். பராசக்தி வசூல் பின்னடவை சந்தித்து வரும் நிலையில், சத்ய ஜோதி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்துக்கு சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

3 மாநாடு: சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், விஜய்யின் கோட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் கிளைமேக்ஸில் சிவகார்த்திகேயனை அழைத்து விஜய் கையால் துப்பாக்கி கொடுக்க வைத்து தனது அடுத்த படத்துக்கான பூஸ்ட்டை ஏற்றினார் வெங்கட் பிரபு. இந்நிலையில், 3 மாநாடு படத்தை போல சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இருக்கும் என உறுதியளித்த நிலையிலும், படத்தின் பட்ஜெட்டை குறைக்க தயாரிப்பு நிறுவனம் கிடுக்கிப்பிடி போட்டு வருவதாக பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.
வெங்கட் பிரபுவுக்கு சிக்கல்: மதராஸி, பராசக்தி என தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸில் சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் சொதப்பி வரும் நிலையில், 200 கோடி பட்ஜெட்டில் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை உருவாக்கினால், வசூல் ரீதியாக சிக்கல் ஏற்படும் என்பதால், புரொடக்ஷன் செலவுகளை குறைக்க சொல்லியும் சரியாக பயன்படுத்த சொல்லியும் தயாரிப்பு நிறுவனம் அறிவுறுத்தியிருப்பதாக கூறுகின்றனர். சிவகார்த்திகேயனின் அடுத்த படம் கண்டிப்பாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி அடையும் என வெங்கட் பிரபு உறுதி அளித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications