லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
சென்னை : டாக்டர், அயலான் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இப்பொழுது சிவகார்த்திகேயன் லைகா நிறுவனத்துடன் இணைந்து புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த திரைப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று காலை வெளியாகும் என சிவகார்த்திகேயன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் சிவகார்த்திகேயன் படத்தில் டைட்டில் வீடியோ அப்டேட் தற்போது வெளியாகி இணையதளத்தில் வைரலாகி ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குடும்பங்கள் கொண்டாடும்
நம்ம வீட்டுப்பிள்ளை பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று குடும்பங்கள் கொண்டாடும் சூப்பர் ஹிட் படமாக திரையரங்கில் பல நாட்கள் ஓடி வசூலை வாரி குவித்த நிலையில் அதைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இப்பொழுது நண்பரும் இயக்குனருமான கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் உடன் இணைந்து டாக்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

டாக்டர்
இதுவரை கலகலப்பான காமெடி திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன் சமீப காலமாகவே சமூக அக்கறையுள்ள திரைப் படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். வேலைக்காரன், ஹீரோ திரைப்படங்களை தொடர்ந்து டாக்டர் திரைப்படமும் ஒரு சமூக அக்கறை கொண்ட ஒரு திரைப்படமாகத்தான் இருக்கும் என நம்பப்படுகிறது.

கிராபிக்ஸ் பணிகள்
டாக்டர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இதன் ப்ரீ புரோடக்சன் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறு வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது, அதேசமயம் இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் திரைப்படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான சயின்ஸ் ஃபிக்சன் கதையில் சிவகார்த்திகேயன் நடித்துவர இந்த படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிந்து அசரவைக்கும் நவீன தொழில்நுட்ப கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது இதில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

கலர்ஃபுல்லான வீடியோ
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்தை பற்றிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என நேற்று அறிவித்திருந்த நிலையில், அதில் லைகா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அறிவிப்பின்படி இப்பொழுது காலை 11 மணிக்கு சூப்பரான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் அட்லியின் உதவியாளர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் புதிய திரைப்படத்திற்கு "டான்" எனப் பெயரிடப்பட்டிருக்கும் நிலையில் அதில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார், லைகா நிறுவனம் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் மூலம் கலர்ஃபுல்லான வீடியோவை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் கல்லூரியை மையமாக கொண்டு உருவாகப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











