செம்ம கடுப்பில் கவின் ஆர்மி.. இப்படி பண்ணிட்டீங்களே சிவகார்த்திகேயன்!

Recommended Video

Bigg boss Kavin in Sivakarthikeyan movie | சிவகார்த்திகேயனுடன் இணையும் கவின்!

சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 3வது படமாக பிக்பாஸ் கவின் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த கவின் ஆர்மிக்கு செம்ம பல்பு கிடைத்துள்ளது.

கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படங்களை தொடர்ந்து சொந்த தயாரிப்பில் சிவகார்த்திகேயனே நடிக்கிறார். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் உருவாகும் அந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனுடன் இணைந்து தயாரிக்கிறது.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள அந்த படத்திற்கு டாக்டர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தளபதி 64

தளபதி 64

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64' படத்திற்கு டாக்டர் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக, சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் பரவியது. தற்போது அது வதந்தி என உறுதியாகியுள்ளது. இந்நிலையில், டாக்டர் தலைப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்துள்ளது.

14 வருட நட்பு

லேடி சூப்பர்ஸ்டார், யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே 14 வருட நட்பு இருக்கிறது. காமெடி த்ரில்லர் படமாக கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன், டாக்டரில் வித்தியாசமான சிவகார்த்திகேயனை காட்டவுள்ளார்.

கடுப்பில் கவின் ஆர்மி

கனா படத்தில் தர்ஷனுக்கும், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ரியோவுக்கும் வாய்ப்பு தந்த சிவகார்த்திகேயன், கவினை ஹீரோவாக தனது மூன்றாவது படத்தை தயாரிப்பார் என எதிர்பார்த்த கவின் ஆர்மிக்கு, இந்த அறிவிப்பு சற்று மன கசப்பை கொடுத்துள்ளது. ஆனால், டாக்டர் படத்தில் கவின் மற்றும் தர்ஷன் இடம்பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ள செய்தி கவின் ஆர்மிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

கேங் லீடர் நாயகி

கேங் லீடர் நாயகி

தெலுங்கில் நான் நடிப்பில் வெளியான கேங் லீடர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகவுள்ளார்.

மீண்டும் அனிருத்

மீண்டும் அனிருத்

சீமராஜா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டு பிள்ளை என சிவகார்த்திகேயன் - அனிருத் காம்போ நடுவில் மூன்று படங்களில் மிஸ் ஆகியிருந்தது. தற்போது டாக்டர் படத்திற்கு மீண்டும் சிவகார்த்திகேயன் - அனிருத் காம்போ இணைந்துள்ளதால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வேற லெவல் குஷியில் இருக்கின்றனர். சமீபத்தில் தர்பார் படத்திற்காக அனிருத் போட்ட சும்மா கிழி பாடல், தென்னிந்தியாவிலேயே முதல் நாளில் மிகப்பெரிய ரெக்கார்டு செய்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் நீட்?

டாக்டர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால், மீண்டும் நீட் குறித்த படமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ள ஹீரோ படமும், மருத்துவ கல்வி மற்றும் ஊழலை சுற்றி நடைபெற உள்ளதால், மீண்டும் அதே போன்ற ஒரு சப்ஜெக்ட்டா அல்லது, அதிலிருந்து வேறுபடுமா என்ற விவாதங்களும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X