டாக்டரை தொடர்ந்து ’டான்’ ஆகும் சிவகார்த்திகேயன்.. லைகா தயாரிப்பில் இயக்கப் போவது யார் தெரியுமா?

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

Recommended Video

வருகிறார் ‘டான்’ சிவகார்த்திகேயன் வெளியானது ‘பர்ஸ்ட்’ லுக் வீடியோ!

லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு 'டான்' எனப் பெயரிட்டுள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.

’டான்’ சிவகார்த்திகேயன்

டாக்டர், அயலான் உள்ளிட்ட படங்களின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது 19வது படத்தின் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். 'டான்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளதாம்.

இயக்குநர் யார்

இயக்குநர் யார்

சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படத்தை அறிமுக இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார். இவர், இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. அட்லி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ராஜா ராணி படத்திலேயே நடித்திருக்க வேண்டும். ஆனால், இன்னமும் அவர்க்ள் கூட்டணி கை கூடவில்லை. இந்நிலையில், அட்லியின் உதவி இயக்குநர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.

ஷாருக்கான் பட டைட்டில்

ஷாருக்கான் பட டைட்டில்

பில்லா படத்தின் இந்தி ரீமேக்கான டான் படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ளார். டான் படம் முதல் மற்றும் இரண்டாம் பாகமும் வெளியாகி உள்ளது. இந்நிலையில், லோக்கல் ஷாருக்கான் என அழைக்கப்படும் சிவகார்த்திகேயன் டான் என்கிற டைட்டிலில் படம் நடிக்கப் போவது வேற மாறி ஸ்பெஷல் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தை தெறிக்க விட்டு வருகின்றனர்.

அனிருத் இசை

அனிருத் இசை

தனுஷ் அனிருத் காம்போவை அடுத்து கலக்கி வருவது சிவகார்த்திகேயன் அனிருத் காம்போ தான். டாக்டர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் காம்போ டான் படத்திற்காக இணைந்துள்ளது. செல்லம்மா மாதிரி டான் படத்திலும் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு படங்கள்

இரண்டு படங்கள்

சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் அயலான் படங்களின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், சம்மருக்கு டாக்டர் திரைப்படமும், தீபாவளிக்கு முன்னதாக அயலான் படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் 2 படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய உள்ளது அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X