பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் ..அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் !

சென்னை : இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்று வசூலை வாரி குவித்தத் திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.

அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இந்த திரைப்படத்தை இயக்கிய நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் இவருக்கு அலைபேசி வாயிலாக வாழ்த்துக்களைக் கூறி இருந்தது சமூக வலைதளங்களில் மிகப் பிரபலமாக பேசப்பட்டது.

இவ்வாறு முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த இயக்குனர் தேசிங் பெரியசாமி இப்பொழுது தமிழ் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வரும் சிவகார்த்திகேயன் உடன் தனது அடுத்த திரைப்படத்தில் இணைய உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

வேகமாக பிசினஸ்

வேகமாக பிசினஸ்

இயக்குனராக முயற்சி செய்து கொண்டு இருக்கும் பல இயக்குனர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருப்பது அவர்களின் முதல் திரைப்படமே. அவ்வாறு அறிமுக இயக்குனர்கள் தங்களது முதல் படைப்பிலேயே ரசிகர்களை திருப்தி செய்துவிட்டால் சொல்லவே தேவையில்லை அவர்களின் அடுத்தடுத்த திரைப்படங்கள் மிக வேகமாக பிசினஸ் ஆகிவிடும்.

மிகப்பெரிய பிளாக்பஸ்டர்

மிகப்பெரிய பிளாக்பஸ்டர்

அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்க வைத்ததோடு இந்த ஆண்டில் வெளியான மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படம் என்ற பெருமையும் இந்த திரைப்படம் பெற்றுள்ளது.

எந்த சாயலும் இல்லாமல்

எந்த சாயலும் இல்லாமல்

துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்சன், நிரஞ்சனி அகத்தியன், கௌதம் வாசுதேவ் மேனன் என பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கியிருந்தார். அறிமுக இயக்குனர் என்ற எந்த ஒரு சாயலும் இல்லாமல் திரைப்படத்தை படு நேர்த்தியாக எடுத்திருந்த தேசிங் பெரியசாமிக்கு பல்வேறு திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், நல்ல திரைப்படங்கள் ஒவ்வொரு முறையும் வெளியாகும்போது இயக்குனரை வாழ்த்தும் பண்பை கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேசிங் பெரியசாமியையும் தொலைப்பேசியில் அழைத்து பாராட்டி இருந்தார்.

அட்டகாசமான அப்டேட்

அட்டகாசமான அப்டேட்

இவ்வாறு பல்வேறு பாராட்டுக்களுக்கும் சொந்தக்காரரான தேசிங் பெரியசாமியின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இவரின் இரண்டாவது திரைப்படத்திற்கான அப்டேட்டை எதிர்நோக்கி ஒட்டுமொத்த திரையுலகமே காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது அல்வா போன்ற அட்டகாசமான அப்டேட் ஒன்று கசிந்துள்ளது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

அது தேசிங் பெரியசாமி தனது இரண்டாவது படத்தின் வேலைகளை மிக விரைவில் தொடங்க உள்ளதாகவும் அந்த திரைப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Recommended Video

Sivakarthikeyan adopted White Tiger | Vandalur Zoo, Doctor, Ayalaan
அதிகாரபூர்வமாக

அதிகாரபூர்வமாக

மேலும் இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ் கே புரொடக்சனில் தயாரிக்க உள்ளதாக செய்திகள் கசிந்துள்ள வேலையில் இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ இன்னும் ஆகவில்லை. எனவே இந்த சூப்பர் அப்டேட் மிக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X