அந்த பிரபல ஹீரோவோட சேர்ந்து ஹீரோ சிவகார்த்திகேயன் நடிக்கலையாமே..அதுக்குள்ள அப்படி சொல்லிட்டாய்ங்க!
சென்னை: பிரபல ஹீரோவுடன் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக வந்த செய்தியை, படக்குழு மறுத்துள்ளது.
Recommended Video
நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது, ரவிகுமார் இயக்கும் அயலான் படத்தில் நடித்துவருகிறார்.
இதில் ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

ஆக்ஷன் காமெடி
இந்தப் படத்தை அடுத்து 'டாக்டர்' என்ற படத்தில் நடிக்கிறார், சிவகார்த்திகேயன். இதை 'கோலமாவு கோகிலா' நெல்சன் இயக்குகிறார். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். ஆக்ஷன் காமெடி கதையை கொண்டது இந்தப் படம். இதையடுத்து பிரபல தெலுங்கு ஹீரோ, பவன் கல்யாண் நடிக்கும் படத்தில், அவருடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிப்பதாகச் செய்திகள் வெளியாயின.

வக்கீல் சாப்
ஜனசேனா என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வரும் பவன் கல்யாண், இப்போது வக்கீல் சாப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அஞ்சலி, நிவேதா தாமஸ், பிரகாஷ் ராஜ், நரேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். தமன் இசை அமைக்கிறார். வேணு ஶ்ரீராம் இயக்கும் இந்தப் படம், இந்தியில் வெளியான, பிங்க் படத்தின் ரீமேக். இதன் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

எதிர்பார்ப்பு
இரண்டு வருடத்துக்கு பிறகு பவன் கல்யாண் நடிக்கும் படம் இது என்பதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தமிழில், இதன் ரீமேக்கில் அஜித்குமார் நடித்திருந்தார். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் (PSPK 27) படத்தை கிரிஷ் இயக்குகிறார். பீரியட் படமாம் இது. கிரிஷ், தமிழில் சிம்பு, பரத் நடித்த வானம் படத்தை இயக்கியவர்.

ஜாக்குலின் பெர்ணாண்டஸ்
பவன் கல்யாண் நடிக்கும் படத்தில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸும், நிவேதா பெத்துராஜூம் ஹீரோயின்களாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்தப் படத்தில், சிவகார்த்தியேன் முக்கியமான கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாயின.

கிரிஷ் தரப்பில் மறுப்பு
சிவகார்த்திகேயன், கனா படத்தின் தெலுங்கு ரீமேக்கான, 'கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி'யில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அவர் நடித்துள்ள படங்கள், தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுன்றன. இந்நிலையில் சிவகார்த்திகேயன் இதில் நடிப்பதாக வந்த தகவலை இயக்குனர் கிரிஷ் தரப்பில் மறுத்துள்ளனர். தற்போது வக்கீல் சாப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பவன். அதன் ஷூட்டிங் முடிந்த பிறகு இந்தப் படம் பற்றிய முழு தகவலும் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











