Sivakarthikeyan - வெறும் வசூல் மட்டும் போதாது.. வேறு மாதிரி கொடுக்க வேண்டும் - மாவீரன் சிவகார்த்திகேயன்
சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு வரவேற்பை பெற்றிருக்கும் சூழலில் தன்னுடைய நடிப்பு குறித்து அவர் பேசியிருப்பது ட்ரெண்டாகியுள்ளது.
டாக்டர், டான் ஆகிய படங்களின் பெரும் வரவேற்புக்கு பின் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் தோல்வியடைந்தது. பிரின்ஸில் விட்டதை உடனடியாக பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் நடித்த படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது.

குட் ரெஸ்பான்ஸ்: மண்டேலா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மடோன் அஸ்வின் இயக்கம் என்பதால் படத்தின் மீதான எக்கச்சக்க எதிர்பார்ப்போடு தியேட்டருக்கு சென்றனர் ரசிகர்கள். அவர்களது எதிர்பார்ப்பு பொய்யாகாத வகையில் படமும் அமைந்திருந்தது. ஃபேண்டஸி ஜானரில் உருவாகியிருந்தாலும் ரசிகர்களுக்கு எளிதில் கனெக்ட் ஆகும் வகையில் அஸ்வின் படத்தை இயக்கியிருந்ததால் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸை கொடுத்துவருகின்றனர் ரசிகர்கள்.
பாராட்டை பெறும் சிவகார்த்திகேயன்: சிவகார்த்திகேயன் நடிக்க வந்த புதிதில் ஒரே மாதிரி நடிக்கிறார் என்ற விமர்சனத்தை சந்தித்தார். அந்த விமர்சனத்தை ஆரோக்கியமாக எடுத்துக்கொண்ட சிவா தனது நடிப்பை டாக்டர் படத்தில் வித்தியாசமாக கொடுத்திருந்தார். அதே ஃபார்முலாவில் மாவீரன் படத்திலும் நடித்திருக்கிறார். பயந்த சுபாவம் உள்ள கேரக்டரில் பக்குவமாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் அவர் ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்புகிறார்.
இதன் காரணமாக சிவகார்த்திகேயன் தனது நடிப்பை மெருகேற்றியிருக்கிறார். இதே ஸ்டைலில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து அவர் நடிக்க வேண்டும் என பலரும் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.
வசூலில் செம: மாவீரன் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸே கிடைத்திருக்கிறது. அதேபோல் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகி மூன்று நாட்கள் முடிவடைந்திருக்கும் சூழலில் இதுவரை மாவீரன் படம் 35 கோடியிலிருந்து 40 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் 50 கோடி ரூபாயை எட்டிவிடும் என்பதால் இதே வேகத்தில் வசூல் செல்லும்பட்சத்தில் நிச்சயம் 100 கோடி ரூபாயை படம் நெருங்கும் என்ற நம்பிக்கையில் கூறுகின்றனர் ரசிகர்கள்.
ட்ரெண்டாகும் சிவாவின் பேச்சு: இந்நிலையில் டாக்டர் படத்தின் வெற்றிவிழாவின்போது சிவகார்த்திகேயன் பேசியிருப்பது தற்போது ட்ரெண்டாகியுள்ளது. அந்த விழாவில் பேசிய அவர், "நான் நடித்த சில படங்களுக்கு மோசமான விமர்சனங்கள் வந்தன. அந்தப் படங்கள் வணிக ரீதியாக வெற்றியடைந்திருந்தாலும் பெர்ஃபார்மன்ஸுக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

சிவா எடுத்த முடிவு: எனவேதான் இனி வசூல் ரீதியாக மட்டும் வெற்றி பெற்றால் போதாது. விமர்சன ரீதியாகவும் எனது படங்கள் பாராட்டை பெற வேண்டும் என முடிவெடுத்தேன். அதன் காரணமாகத்தான் டாக்டர் போன்ற கமர்ஷியல் படங்களுக்கு அப்பாற்பட்ட படத்தில் நடித்தேன். இனி வரும் ஒவ்வொரு படத்திலும் எனது நடிப்பில் ஏதேனும் ஒரு வித்தியாசத்தை காட்ட வேண்டும் எனவும் முடிவெடுத்தேன்" என கூறினார்.
அவரது இந்த பழைய பேச்சை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயன் சொன்ன மாதிரியே மாவீரன் படத்தில் செய்துவிட்டார் என கூறிவருகின்றனர். சிவகார்த்திகேயன் அடுத்ததாக கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











