Don't Miss!
- News
கைக்குழந்தைக்கு "தனி டிக்கெட்" கேட்ட விமான நிறுவனம்! பெற்றோர் எடுத்த விபரீத முடிவு! அலறிய ஏர்போர்ட்
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
டான் சூட்டிங்கில் அலறி அடித்து ஓடினேன்....சிவகார்த்திகேயன் யாரைப் பார்த்து ஓடினார்னு பாருங்க!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனின் டான் படம் வரும் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் பிரமோஷன் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. படத்தின் ட்ரெயிலர் வெளியீடு நேற்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
டியர்
திருமலையானே..
அது
நடந்துடுச்சு..
நயன்தாராவுடன்
மீண்டும்
திருப்பதியில்
விக்னேஷ்
சிவன்!

டான் படம்
நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, ஷிவாங்கி, பால சரவணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் டான். அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ள நிலையில் படம் வரும் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன்
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். சில காட்சிகளில் பள்ளி மாணவராகவும் அவர் நடித்துள்ளார். படத்தில் அவருக்கு பிரியங்கா மோகன் ஜோடியாகியுள்ளார். இந்த ஜோடி டாக்டர் படத்திலேயே சிறப்பாக வொர்க் அவுட் ஆன நிலையில், தற்போது இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.

ட்ரெயிலர் வெளியீடு
படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள நிலையில் சிவகார்த்திகேயன், ஷிவாங்கி, பிரியங்கா மோகன், பால சரவணன், விஜே விஜய் உள்ளிட்டவர்கள் படத்திற்கான பிரமோஷன் பணிகளில் சிறப்பாக பங்கேற்று வருகின்றனர். படத்தின் ட்ரெயிலர் வெளியீடு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றுள்ளது.

அலறி ஓடிய சிவகார்த்திகேயன்
இதில் படக்குழுவினர் பங்கேற்று படம் குறித்தும், சூட்டிங்கின்போது நடைபெற்ற அனுபவங்கள் குறித்தும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் தான் சூட்டிங்கின்போது ஷிவாங்கியை பார்த்து அலறி அடித்து ஓடியதாக தெரிவித்துள்ளார்.

ஷிவாங்கியின் லபலப பேச்சு
அவருக்கு கேமரா முன்பு, பின்பு என்று மாறி நடிக்கத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார். அவர் தொடர்ந்து லபலப என்று எதையாவது பேசிக் கொண்டே இருப்பார் என்றும் அனைவரும் சேர்ந்து அவரை கட்டுப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சிவாங்கியின் பேச்சை சிவகார்த்திகேயன் மேடையில் மிமிக்ரி செய்தும் காட்டினார்.

அலறி ஓட்டம்
சூட்டிங்கில் நான்கைந்து நாட்களிலேயே தான் ஷிவாங்கியை பார்த்தால் பயந்து அலறி ஓடியதாகவும் அவர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் அவர் தன்னை கண்டுபிடித்து தொடர்ந்து சந்தேகங்களை கேட்டதாகவும், அவரிடம் தப்பிக்க வழியில்லாமல் தான் தவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அழகான கேரக்டர்
படத்தில் அவருக்கு மிகவும் அழகான கேரக்டர் என்றும், ஆரம்பத்தில் தயக்கத்துடன் நடித்தாலும் தொடர்ந்து சிறப்பாக நடித்துள்ளதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் திரைத்துறையில் ஷிவாங்கி அறிமுகமாகியுள்ளார். முன்னதாக விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை அவர் பெற்றுள்ளார்.