தலைவர் 169 படத்துல நடிக்க கூப்பிட்டா உடனே ஓடிடுவேன்... சிவகார்த்திகேயன் பளீச்!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் 13ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் அவர் தற்போது படத்தின் பல்வேறு விஷயங்களையும் பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படத்தை நெல்சன் இயக்கியிருந்த நிலையில் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து சில பிரச்சினைகளை சந்தித்து வந்த அவரது நிதி நிலைமை தற்போது சீரடைந்துள்ளது.

டான் படம் ரிலீஸ்

டான் படம் ரிலீஸ்

இந்தப் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அவர் அடுத்தடுத்து நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது லைகாவுடன் அவர் இணைந்து தயாரித்துள்ள டான் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, பாலா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

மே 13ல் ரிலீஸ்

மே 13ல் ரிலீஸ்

படம் வரும் மே மாதம் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது படத்தின் பிரமோஷன் பணிகளில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டுள்ளார். படத்தின் கல்லூரி வாழ்க்கை தனது கல்லூரி வாழ்க்கையை நினைவு படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

17 அரியர்ஸ் வைத்த சிவா

17 அரியர்ஸ் வைத்த சிவா

கல்லூரி காலகட்டத்தில் தான் 17 அரியர்ஸ் வைத்திருந்ததாகவும் தொடர்ந்து சக மாணவிகளின் உதவியுடன்தான் அதை கிளியர் செய்ய முற்பட்டதாகவும் அவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தப் படம் சக மாணவனின் வாழ்க்கையை பற்றி கேட்டறியும் அனுபவத்தை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எஸ்ஜே சூர்யாவின் எனர்ஜி

எஸ்ஜே சூர்யாவின் எனர்ஜி

படத்தில் எஸ்ஜே சூர்யாவின் எனர்ஜி மிகவும் சிறப்பாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் இந்தப் படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ள நிலையில் படத்தில் ஒரு மாணவனுக்கும் அவனது ஆசிரியருக்கும் இடையிலான உறவை சொல்லும் வகையில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு?

ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு?

சமீப காலங்களாக அவர் தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு மகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த தகவல் குறித்த கேள்விக்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், தான் ரஜினியின் தீவிர ரசிகன் என்றும் அதுபோன்ற சான்சை நெல்சன் கொடுத்தால் உடனடியாக ஓடிப்போய் நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X