ஆஸ்கர் வென்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானைக்கு உதவிய சிவகார்த்திகேயன்.. இந்த விஷயம் தெரியுமா?
சென்னை: ஆஸ்கர் நாமினேஷனில் இந்த முறை மூன்று இந்திய படைப்புகள் இடம்பெற்றன. அதில், இரண்டு படப்பிடிப்புகள் ஆஸ்கர் விருதை தட்டித் தூக்கி அபார சாதனையை படைத்துள்ளன.
ஆஸ்கர் விருதுகளை காசு கொடுத்து வாங்கி விட்டனர் என ஆர்ஆர்ஆர் டீம் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகள் ஒரு பக்கம் கிளம்ப ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கிடம் இல்லாத காசா? அவர் படத்துக்கு ஏன் ஒரு ஆஸ்கர் கூட கிடைக்கவில்லை இந்த ஆண்டு என நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற ஆவண குறும்படமான தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் படத்தில் இடம்பெற்ற யானை ரகுவுக்கு சிவகார்த்திகேயன் உதவி செய்துள்ளதாக சூப்பரான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

ஆஸ்கர் லாபி சர்ச்சை
ஆஸ்கர் விருது பெற லாபி நடத்தப்பட்டதாக இயக்குநர் ராஜமெளலி மீது அவரது ஹேட்டர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். இந்நிலையில், தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்தை தயாரித்த குனீத் மோங்கா ஆஸ்கர் விருது வெல்ல எந்தவொரு குறுக்கு வழியும் இல்லை என அதிரடியாக பேட்டியளித்து ஆஸ்கர் லாபி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சுற்றுலா பயணிகள் ஆர்வம்
முதுமலையில் ஆதரவற்று கிடந்த இரண்டு குட்டி யானைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் கணவன் மனைவியை பற்றிய ஆவணப் படம் தான் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ். ஆஸ்கர் வென்ற நிலையில், அந்த குட்டி யானைகளான ரகு மற்றும் அம்முவை காண சுற்றுலா பயணிகள் தற்போது அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் உதவி
தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணக் குறும்படத்தில் இடம்பெற்றிருந்த ரகு என்கிற யானை ஓசூர் அருகே கடந்த 2017ல் மீட்கப்பட்டது. தெரு நாய்களிடம் கடிபட்டு ரத்தக் காயங்களுடன் சுற்றிந்திரிந்த இந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு முதுமலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது ரகுவுக்கு காஸ்ட்லியான சிகிச்சை தேவைப்பட்டதை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் பண உதவி செய்து காப்பாற்றியதாக வனத்துறை அதிகாரி ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜோதிடர் ஷெல்வியும் உதவி செய்திருக்கிறாராம்.

வனவிலங்குகள் மீது அக்கறை
நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு புலியையும் யானையையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். வனவிலங்குகள் மீது அதிக ஆர்வம் கொண்ட சிவகார்த்திகேயன் தொடர்ந்து இதுபோல மற்ற உயிரினங்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருவதை அறிந்த அவரது ரசிகர்கள் சிவகார்த்திகேயனை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











