Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சூரியின் ஹோட்டலை திறந்து வைக்க ராஜஸ்தானில் இருந்து வந்த சிவகார்த்திகேயன்!
Recommended Video
மதுரை : காமெடி நடிகர் சூரி, மதுரையில் தனது குடும்பத்தினரோடு சேர்ந்து துவக்கியுள்ள புதிய ஹோட்டலை, நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்தார்.
தமிழ்த் திரையுலகத்தில் தற்போது இருக்கும் நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் சூரி. பொதுவாக, நடிகர்கள் மார்க்கெட்டில் இருக்கும் போதே ஏதாவது ஒரு தொழிலைத் தொடங்குவார்கள். அதேபோன்று நடிகர் சூரியும் ஹோட்டல் தொழிலில் இறங்கியுள்ளார்.
மதுரை, காமராஜர் சாலையில் அம்மன் என்ற பெயரில் புதிதாக ஹோட்டல் கட்டியுள்ளார் சூரி. இந்த ஹோட்டலை திறந்துவைக்க தனது நண்பரும், நடிகருமான சிவகார்த்திகேயனை அழைத்திருந்தார் சூரி.
அதன்படி ராஜஸ்தானில் படப்பிடிப்பில் இருந்த சிவகார்த்திகேயன், சூரிக்காக மதுரை கிளம்பி வந்து அவரது ஹோட்டலை திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷூம் பங்கேற்றார்.
சிவகார்த்திகேயன் வருகையால் அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் அந்தப் பகுதியில் திரண்டனர். இதனால் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.